பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தேவராயரின் புகழாகவே இருக்கக் காண்போம். இவர் உருவாக்கிய சாம்ராஜ்யம் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மைசூர், ஒரிஸ்ஸா ராஜ்யத்தையெல்லாம் உள் ளடக்கிய ஒர் அகண்ட சாம்ராஜ்யமாக இருக்கிறது. ஆட்சி யும் சிறந்ததொரு ஆட்சியாக இருந்திருக்கிறது என்று சரித். திரம் கூறுகிறது. இன்னும் கலை உலகில் அவரது பிரசித்தியும் பெரிதாகவே இருந்திருக்கிறது. சிறந்த கட்டி டங்கள் கோயில்கள் அணைக்கட்டுகள் கட்டுவதிலேயே தன் உயரிய லட்சியமாகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார். ஹாஸ்பெட்டில் உள்ள ராயர் கேரி, அனந்தபூரில் உள்ள புக்கராயசமுத்திரம், நெல்லூரில் உள்ள ஆனந்தசாகரம். எல்லாம் அவரால் உருவாக்கப்பட்டவையே. இன்னும் தென்னிந்தியக் கோயில்கள் பலவற்றிலும், கோபுரங்கள், மண்டபங்கள் கட்டி விரிவாக்கியவரும் அவரே. மதுரை, பூரீரங்கம் முதலிய இடங்களில் அவர்கட்ட முனைந்த, கோபுரங்கள் ராயர் கோபுரம் என்றே இன்றும் பேசப்படு: கின்றன. காளத்தி அப்பர் கோயிலின் ஆயிரக்கால் மண்ட பத்தை, தில்லைச் சிற்றம்பலவன் கோயிலில் வடக்கு. வாயில் கோபுரத்தை, திருப்பதி வேங்கடவானனின் வாயில் கோபுரத்தை எல்லாம் கட்டியவரும் இவரே. விஜயநகர நாயக்கமன்னர்களின் வழிபடு தெய்வம் விருபாக்ஷர் என்றாலும், கிருஷ்ணதேவராயர் சிறந்த விஷ்ணுபக்தராகவே இருந்திருக்கிறார். சூடிக்கொடுத்த, சுடர்க்கொடியாம் ஆண்டாளிடம் அத்யந்த பக்தி உடையவ ராக இருந்த காரணத்தினால் தமிழ்நாட்டு வைணவத். திருப்பதிகளில் எல்லாம் ஆண்டாள் சந்நிதியையும் அமைத் திருக்கிறார். பிற ம தங் க ைள யு ம் போற்றியிருந்: திருக்கிறார். வேதாந்திகள், அத்வைதிகள், துவைதிகள், லிங்காயத்துகள், ச ம ன ர் க ள், ஏன் முஸ்லீம்கள் எல்லோரையும் ஆதரித்திருக்கிறார். த ன் னு ைட ய ராஜ்ய அதிகாரிகளாக முஸ்லீம்களை நியமித்து இருக் கிறார் என்றால் அதிகம் சொல்வானேன். கலைகளை வளர்த்தது போலவே கலைஞர்களையும் ஆதரித்திருக்