பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 காரணமாக அந்தப் பரந்தாமனைத் தவிர வேறு தெய்வங் களை கண்ணெடுத்தும் பார்க்கமாட்டார். அந்த தெய் வங்கள் இருக்கும் திசைக்கே செல்லமாட்டார். இந்த புண்டரீகர் காஞ்சியில் உள்ள அத்திகிரி அருளாளன் சொன்ன வண்ணம் செய்த பெருமாள், அஷ்டபுயகரர்: உளகளந்தார், பச்சை வண்ணர், பவள வண்ணர் முதலிய பெருமாள்களை எல்லாம் வந்தித்து வணங்கிவிட்டு, மேற்கு நோக்கி நடந்து வருகிற போது, இந்தத் திருப்பாற்கடல் பக்கமாக வந்திருக்கிறார். பெயரைக் கேட்டதும் அங்கு அரங்கநாதன் பள்ளி கொண்டிருப்பான். அவனையும் வணங்கி மேல் செல்லுவோமே என்று ஊருக்குள் நடந்திருக் கிறார். அப்போது ஒரு கோயில் அவர் கண்ணில் பட்டிருக் கிறது. அக்கோயில் வாயிலில் நந்தி இருந்திருக்கிறது. மதில் சுவரிலும் நந்தியின் வடிவங்கள் பல இருந்திருக்கின்றன. இவற்றை கண்டதும் அடடா ! இது சிவன் கோயில் அல்லவா? அந்தப் பொல்லாத சிவன் ஊர்ப்பெயரை திருப் பாற் கடல் என்று வைத்துக் கொண்டல்லவா நம்மை ஏமாற்றியிருக்கிறான். நானா ஏமாறுகிறவன். இவனை ஏறெடுத்துப் பார்க்காமலேயே திரும்பிவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே வந்த வழியே திரும்பி இருக்கிறார். இதனேக் கவனித்த விஷ்ணு நினைத்திருக்கிறார். இவர் செய்வது தவறு என்பதை அவரைத் திருத்தவும், உலகிற்கு ஒரு உண்மையை எடுத்துக் காட்டவும் முனைந்திருக்கிறார். அவரே ஒரு கிழவேதியர் வடிவில் வந்து புண்டரீசுவரை வழிமறித்து, என்ன சுவாமி தரிசனத்துக்கு வந்தவர், கோயிலுக்குள் நுழையாமலேயே திரும்பி விட்டீர்களே, காரணம் என்ன?' என்று கேட்டிருக்கிறார். புண்டரீகரும்: நான் இது பெருமாள் கோயில் என்று நினைத்து இங்கு வந்து விட்டேன். பார்த்தால் அது சிவன் கோயிலாக இருக் கிறது. நானோ பெருமாளைத் தவிர சிவனை எல்லாம் வணங்குவதில்லை என்ற ைைராக்கிய முடையவன். ஆதலால் தான் திரும்புகிறேன் எ ன் று சொல்லியிருக்கிறார். கிழவேதியரோ, என்ன சுவாமி இது, சிவன் கோயில்