பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 மறைத்துக் கட்டியிருக்கும் வேட்டியை கொஞ்சம் துரக்கிக் காட்டும்படி அர்ச்சகரை வேண்டினால் அவர் காட்டுவார். அப்படி காட்டினாலும், நாம் திருவடித் தரிசனம் காண இயலாது. காரணம் கால்கள் இரண்டும் பூமிக்குள்ளேயே புதைந்திருக்கும். இதற்கு காரணம் வினவினால் தலவர லாற்றுத் தகவலே கிடைக்கும். தலவரலாறு இதுதான். இந்த வட்டாரத்திலே அன்று கு.காசுரன் என்று ஓர் அசுரன் இருந்திருக்கிறான். அவன் பிரம்மனை நோக்கிக் கடுந் தவம் செய்திருக்கிறான். தவத்தில் வெற்றி பெற்று தனக்கு தேவர்களாலும், ஏன் அரியினாலும், அரனாலுமே மரணம் ஏற்படக் கூடாது என்று வரம்பெற்றிருக்கிறான். அந்த வரபலத்தால் கர்வம் கொண்டு தேவர்களையும் மக்களை யும் துன்புறுத்தி வந்திருக்கிறான். தேவரும் மற்றவர்களும் அரியிடமும் காளியிடமும் முறையிட இருவரும் தனித் தனியாய் அவனை அணுகவோ அல்லது அழிக்கவோ இயலாது என்று கருதி, இருவரும் இணைந்த ஒரு வடிவம் தாங்கி, அவ்வடிவுடனேயே அவனிடம் போரிட்டு வென்று, அவனைப் பாதாளத்தில் அழுத்தியிருக்கின்றார். மிகுந்த வரபலமுடைய அந்த குகாசுரனை பாதத்தில் அழுத்துவது என்பது என்ன எளிதான காரியமா? அழுத்தம் அதிகம் கொடுக்க வேண்டியிருந்தது. அப்படி அழுத்தியதில் ஹரனின் கால்களுமே பூமியில் புதைந்து போயிருக்கிறது. இன்னும் அந்த குகாசுரன், அழுத்திய காலை அவன் தலையி லேயே எப்போதும் வைத்திருக்கும்படி வேண்டியிருக் கிறான். இதுவும் ஒரு காரணம், திருவடி பூமியிலேயே அழுந்தியிருப்பதற்கு பின்னர் அவன் வேண்டியபடியே அந்தத்தலமும் குகாரண்யசேrத்திரம் என்று பெயர் பெற் றிருக்கிறது. அந்தக் கோயிலுக்கு வடபுறம் ஒரு சிறு கோயில் இருக் கிறது. அங்கு கோயில் கொண்டிருப்பவர் தேவியர். ஆம் அங்கு பார்வதிதான் பிரதான தேவி. அவள் பக்கத்திலே