பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ஹம்பி பம்பாபதி உலகம் உருண்டு கொண்டிருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் உண்மையில் உருண்டு கொண்டிருக் கிறதோ என்னவோ, இந்த உலகில் தோன்றும் சாம்ராஜ் யங்கள் உருண்டு கொண்டிருக்கின்றன. சரித்திர ஏடுகளைப் புரட்டினால் எத்தனை எத்தனை சாம்ராஜ்யங்கள் தோன் றித் தோன்றி நின்று அழிந்து போயிருக்கின்றன, ஒரு சாம் ராஜ்யத்தின் அழிவிலே இன்னொரு சாம்ராஜ்யம் தோன்றி யிருக்கிறது.பழங்காலத்தில் எகிப்திய சாம்ராஜ்யம்,பாரசீக சாம்ராஜ்யம் கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் எல்லாம் உலகில் தோன்றி,அவைகளும் காலகதியில் அழிந்து போயிருக்கின்றன. இந்திய சரித்திரத்தைப் கொஞ்சம் புரட்டினால், அங்கிருந்த அந்தப் பழைய மெளரிய சாம் ராஜ்யம், குப்த சாம்ராஜ்யம், ஏன் மொகலாய சாம் ராஜ்யம், எல்லாம் அழிந்து தானே போயிருக்கின்றன. நிரம்பச் சொல்வானேன்? நம் தமிழகத்தின் சரித்திரத் தையே நோக்கினால் இங்கிருந்த பல்லவ பேரரசு, சோழப் பேரரசு போன்ற பெரிய சாம்ராஜ்யங்களும் அழிந்து தானே போயிருக்கின்றன. எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று கட்டியம் கூறிக் கொண்டு உலகின் பெரும் பகுதியை ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் இன்று நிலை குலைந்து தானே நிற்கிறது. இப்படி சாம்ராஜ்யம் சாம்ராஜ்யமாக அழிந்தாலும் அந்த சாம்ராஜ்யங்களின் பெருமைகளை விளக்கும் சரித்திரச் சான்றுகள் நம் கண் முன் நின்று பழம் பெருமைகளை எ ல் ல ள ம் விளக்கத்தான் செய்கின்றன. அவைகளை வைத்துத்தானே அந்த அந்த சாம்ராஜ்ய சரித்திரத்தையே உருவாக்கவும் முடிகின்றன. இப்படிப்பட்ட சாம்ராஜ்யம் ஒன்றுதான் விஜயநகர சாம்ராஜ்யம், அந்த சாம்ராஜ்யம் 27 38-8