பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 சோழவள நாட்டிலே தஞ்சை மாவட்டத்திலே நன்னிலத் திற்கு கிழக்கே ஏழு எட்டு மைல் தூரத்திலே உள்ள திருச் செங்காட்டங்குடியில் உள்ள கோயில் கணபதிச்சுவரம் என்ற பெயருடன் நிலவி வருகிறது. பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்றாட்டி நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்த சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங்குடி அதனுள் காலினால் கூற்று உதைத்தான் கணபதி ஈச்சுரத்தானே. என்பது ஞானசம்பந்தர் தேவாரம், அந்த கோயிலில் பிரதான விநாயகராக இருப்பவர் வாதாபி கணபதி. தமிழ் நாட்டில் உள்ள விநாயகரது சிலை வடிவங்களில் இந்த, வாதாபி கணபதியே மிகப்பழையவர். அதனால்தானோ நம் சங்கீத வித்வான்களும் கச்சேரி ஆரம்பத்திலேயே இந்த வாதாபி கணபதி வணக்கத்தோடே ஆரம்பிக்கின்றனர். இந்த வாதாபி கணபதி திருச்செங்காட்டங்குடிக்கு, எப்படி வந்திருக்கிறார் என்று அறிய சரித்திர ஏடுகளைப்புரட்ட வேண்டும். வாதாபி மேலைசாளுக்கியரது தலைநகரம் அங்கிருந்து அரசாண்ட இரண்டாம்புலிகேசி காஞ்சியி லிருந்து அரசாண்ட பல்லவ மன்னனான மகேந்திர வர்மனோடு போர் தொடுத்திருக்கிறான். காஞ்சிநகரையே முற்றுகை இட்டிருக்கிறான். பின்னர் மகேந்திரனுடன் சமா தானம் செய்து கொண்டவன் போல் நடித்து அவன் செய்த உபசாரங்களை எல்லாம் ஏற்றுத் தன் தலைநகர் திரும்பும் போது காஞ்சிக்கு வெளியில் உள்ள கிராமங்களைச் சூறை. யாடி இருக்கிறான். பெண்களை சிறைப்பிடித்திருக்கிறான். இதற்கெல்லாம் பழிவாங்க ம கே ந் தி ர வர் ம ன் நீ ண் ட க | ல ம் வாழ்ந்திருக்கவில்லை. ஆனால் அவனது மகனான ந ர சி ம் ம வ ர் ம ன், ஆம்.