பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மாமல்லபுரத்தை உ ரு வ க் கி ய மாமல்லன்தான் பின்னர் ஒரு பெரும் படைகொண்டு சென்று சாளுக்கியரை வென்று வாதாபிக்குள் நுழைந்து அந்த நகரையே தீக்கிரை யாக்கி இருக்கிறான். இது நடந்தது கி. பி. 640-ல், இந்த வரலாற்றை எல்லாம், பேராசிரியர் கல்கி எழுதிய அந்த அற்புத நவீனமான சிவகாமியின் சபதத்தில் நாம் படித் திருக்கிறோம். அப்படி நரசிம்மவர்மன் படை எடுத்த போது அப்படையை நடத்திச் சென்ற சேனாதிபதி பரஞ் சோதியார் என்பதையும் அறிவோம். அந்தப் பரஞ் சோதியார் இ ந் த த் திருச்செங்காட்டங் குடிக்காரர் என்பதும் அவரே பின்னர் சிறுத் தொண்டர் என்ற பெயரோடு அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவராக வாழ்ந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது. அவரது வாதாபிப் படை எடுப்பை திருத்தொண்டர் பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் மறக்காமல் சொல்கிறார். மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாபித் தென்னகரம் துகளாகத் துணைநெடுங்கை வரையுகைத்து பன்மணியும் கிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னன எண்ணில கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார். என்பது பாடல். அப்படி பல்பொருளையும் கொண்டு வந்து வாதாபி நரசிம்ம போத்தரையன் காலடியில் கொட்டி யவர், தனக்கென்று ஒரு பொருளையும் கேட்டு எடுத்துக் கொண்டிருக்கிறார். அதுதான் வாதாபிக் கோட்டை வாயிலில் இருந்த கணபதியை பெயர்த்து எடுத்து வந்து, அதைத் தன் சொந்த ஊராகிய திரு.செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை பண்ண மன்னனின் அனுமதியையும் பெற்றிருக் கிறார். அப்படித் தமிழ் நாட்டிற்குள் வந்தவரே வாதாபி கணபதி, அவர் தமிழ்நாட்டிற்கு வருமுன் கோயில்