பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

播 விளக்குதற்குரிய ஆசிரியர் ஒருவர் கிடைப்பதும் அரிது. தொண்டைமான் அவர்களுடன் சுமார் பத்தாயிரம் மைல்கள் பயணம் செய்த போதும் அதிசய ஆலயங்களைக் கண்டு மகிழ்ந்த போதும் எனக்கு திருவாசகத்தின் கீழ்க் கண்ட் பாட்ல் தான் ஞாபகத்துக்கு வந்தது. கேட்டாயோ தோழி! கிறிசெய்த வாறு ஒருவன் திட்டார் மதில் புடைசூழ் தென்னன் பெருந் - - > *. . . . . . துறையான் காட்டாதன வெல்லாம் காட்டிச் சிவம் காட்டித் தாட்டாமரை காட்டித் தன் கருணத்தேன்காட்டி நாட்டார் நகை செய்ய நாம் மேலே வீடெய்த ஆட்டான் கொண்டாண்டவா பாடுதுங்காண் - அம்மாய்ை! திருவாசகம்- திருவம்மானை - பாட்டு-6 ஆணிப் பொன் அம்பலத்தே கண்டகாட்சிகள் அற்புதக் காட்சிகள். ஜோதிமலே ஒன்று தோன்றி அதில் வீதியும் உண்டாகிறது. அந்த வீதியில் ஒரு மேடை. அந்த மேடை மேல் ஏறி காணுத காட்சிகளைக் காணும் பேறு பெற்ருேம். இந்தியா என்பது நகரங்களும் நதிகளும், மலையும் மடுவும், காடும் மேடும் மாத்திரம் அல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வடிவில் காட்சி தரும் பேசும் விக்கிரகங்களே என்று நமக்கு உணர்த் தியவர். பெருந்தகை திரு. தொ. மு. பாஸ்கரத் - தொண்டைமான் அவர்கள். அவருடன் கண்ணுற்ற அதிசய ஆலயங்களில் இராஜஸ்தானிலுள்ள தில்வாரா ஆலயங்களும் மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜூராஹோ மிதுன்ச் சிற்பங்களும் ஒரிசாவிலுள்ள சூரியனுர் ஆலயமும் என்றும் அழியாத உயிர்ச் சித்திரங்களாக் என் உள்ளத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றையும், இவை போன்ற ஆலயங்களையும் நான் ஒரு போதும் பார்க்க