பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 யையும் முந்திக்கொண்டு ஒரு கற்பாறை மேல்பக்கம் நீண்டு கொண்டிருக்கும், அந்தச் சுவரை சமன் செய்து அதில் ஒரு சந்தியா தாண்டவமூர்த்தியை ஐந்துஅடிச் சவுக்கத்தில் உப்புச உருவில் செதுக்கியிருக்கிறார். காஞ்சி கைலாச நாதர் கோயிலின் மேல் பிரகாரத்தில் உள்ள சந்தியா தாண்டவமூர்த்தியைப் போலவே இவ்வடிவமும் அமைந்: திருக்கக் காண்போம். இக்குடைவரை வாயிலிலே பூதகணங்கள் பலபல வடிவங்களில் உருவாகி இருப்பார்கள். கோயிலின் கருவறையை நோக்கி நந்தியம்பெருமான் படுத்துக் கிடப்பார். இருகுடைவரையின் முன் மண்டபம் நம் வீடுகளில் உள்ள வராந்தாவைப் போல இருக்கும்.