பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஒன்று இக்குடைவரைகள் கி. பி. 578-ல் வெட்டப் பட்டவை என்று தெரிவிக்கின்றன. இக்குடைவரைகளைக் கண்டபின் இன்னும் சில படிக் கட்டுகள் ஏறி ஒருவாயிலில் நுழைந்து மறுபடியும் கீழே இறங்கினால் நான்காவது குடைவரைக்கு வந்து சேரு வோம். இதுதான் இங்குள்ள குடைவரைகளில் சிறியது. ஜைன தீர்த்தங்கரர் பலரது வடிவங்கள் அங்கே உருவாகி இருக்கின்றன. பார்சவநாதரது வடிவம் ஒன்றும் இங்கிருக் கிறது. இக்குடைவரையில் நடுநாயகமாக நிற்பவர் மகா வீரர்தான். இங்குள்ள தூண்கள் மற்றவைகளைப் போன்ற வைதான் என்றாலும் அந்தத் தூண்களின் போதிகை களிலே யக்ஷனும் யகதிணியும் இணைந்து இணைந்து பல வடிவங்களில் நிற்பதைக் காணலாம். இவைகளையே Bracket figures என்று ஆங்கில விமர்சகர்கள் கூறுகிறார்கள். உலகத்தையும், அங்குள்ள பந்தபாசங்களையும் முற்றும் துறந்த சமண தீர்த்தங்கரர்களிடையே இணைந்து நிற்கும் காதலர் வடிவங்களையும் அமைத்த சிற்பிகளின் மனப் பக்குவம்தான் என்னே என்று அதிசயத்து நிற்போம். பாதாமி என்னும் இவ்வாதாபியில், இந்நான்கு குடைவரைகளையும் அங்குள்ள சிற்பவடிவங்களையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. தமிழ் நாட்டிற்கே விநாயகர் வழிபாட்டை உதவிய நகரமாயிற்றே, ஏதோ தப்பித் தவறி அங்கொரு விநாயகர் அகப்படமாட்டாரா என்று ஊர் முழுதும் தேடினேன். முன்னர் சொன்ன தாண்டவ. மூர்த்தியின் காலடியில் நிற்கும் விநாயகனைத்தவிர வேறு விநாயகர் என் கண்ணுக்கு அகப்படவில்லை என்றாலும் அந்தப் பழைய வாதாபி கணபதியை நினைந்து நினைந்து ஒதுஆவி அனைத்தும் இனிது உவந்து ஏத்த உவந்து உதவும் வாதாபி மழ களிற்றை மலர் தூவி இறைஞ்சுவோம் என்று பாடிக் கொண்டே திரும்பலாம் அல்லவா.