பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பட்டடக்கல் விருபாகூதர் தேசிய ஒருமைப்பாடு என்று எங்கு பார்த்தாலும் பேச்சுக் கேட்கிறது. இன்று பேசுகிறவர்கள் எல்லாம் அரசியல் வாதிகளாக இருக்கக் காண்கிருேம். மொழிவாரி யாக ராஜ்யப்பிரிவினை செய்ததன் காரணமாக மக்கள் உள்ளத்தில் மொழி வெறி வளர்ந்திருக்கிறதே ஒழிய, மொழி வளர்ச்சிக்குரிய ஆர்வம் வளரக் காணோம். ஒருமைப்பாடு உருவாக வேண்டுமென்றால் அது இலக்கியம் மூலமாக சமயம் மூலமாக, கலை மூலமாகத்தான் உருவாக வேண்டும். வேங்கடத்துக்கு அப்பால் நாம் துவங்கிய இந்தத் தல யாத்திரையில் கலை மூலமாகத்தான். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்த தேசிய ஒருமைப் பாடு எவ்வாறெல்லாம் வளர்ந்திருக்கிறது என்பதைக் காண்போம். தேசிய ஒருமைப்பாடு வளர அந்தக் காலத் தில் கலைஞர்கள் பரிவர்த்தனை நடத்தியிருக்கிறார்கள், மன்னர்கள். . - கங்கைப் நதிப்புறத்து கோதுமைப்பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம். என்று கங்கை பாயும் நாட்டையும், காவிரி பாயும் நாட்டை கம் வியாபாரம் மூலம் இணைக்கலாம் என்று எண்ணிய கவிஞர் பாரதி, அது அந்த வியாபாரப் பொருள் பரிவர்த் தனை மூலம் இணைக்க முடியாமல் போனாலும் போக லாம் என்றும் எண்ணியிருக்கிறார். அதனாலேயே கலைப் பொருள் பரிவர்த்தனையை நினைத்திருக்கிறான். உடனே