பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 43. கிறான். அவனைக் கொண்டு விருபாrருக்கு ஒரு கோயிலையும் பட்டடக்கல் என்னும் இடத்தில் கட்டி யிருக்கிறான். அந்த சிற்பியின் வேலைத்திறனையெல்லாம் பாராட்டி அவனுக்கு திரிபுவனாச்சாரியார் என்ற விருதுப் பெயரைச் சூட்டி அழைத்திருக்கிறார். இவனே கங்கைக்கும் வடக்கே உள்ள நாட்டிலிருந்து ஞான சிவாச்சாரியார் என்ற புலவரையும் அழைத்துப் பட்டடக்கல்லில் இரு த் தி கெளரவத்திருக்கிறான். இன்னும் இவரது சபையிலே சர்வ சித்தி ஆச்சாரி, ரேவதி ஒவ ஜீவா, செங்கம்மா வல்லதேவா, தேவ ஆர்யா போன்ற கலைஞர்கள் மற்றப் பிரதேசங்களி லிருந்து வந்து அலங்கரித்திருக்கிறார்கள். இத்தனை விவ ரமும் பட்டடக்கல்லில் உள்ள விருபாக்ஷர் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இப்போது தெரிகிறதல்லவா, தேசிய ஒருமைப்பாட்டிற்கு அன்றே பட்டடக்கல் என்னும் தலத்தில் வித்திடப்பட்டிருக்கிறது எ ன் று, அந்தப் பட்டடக்கல் என்னும் தலத்திற்கே செல்கிறோம் நாம் இன்று. பட்டடக்கல் செல்ல விரும்புபவர்கள் ரயிலில் சென்று பாதாமி ஸ்டேஷனில் இறங்க வேண்டும். அங்கிருந்து வடகிழக்கே எட்டு ஒன்பது மைல் செல்ல வேண்டும். ஆனால் பாதாமியிலிருந்து பட்டடக்கல் செல்ல டாக்சி எல் லாம் கிடைப்பது அருமை. ஆதலால் பாகல்கோட் ஸ்டேஷனிலிருந்தே கார்வைத்துக் கொண்டு இருபது மைல் தெற்கே வந்தால் பட்டடக்கல் வந்து சேரலாம். பாதாமி பட்டடக்கல், ஐகோளே என்னும் மூன்று இடங்களையும் பார்ப்பதற்கு ரயிலில் சென்றாலும் காரில் சென்றாலும் பாகல்கோட் வழியாகச் செல்வதுதான் நல்லது. பட்டடக் கல் பாதாமி குடைவரைகளில் இருந்து பத்து மைல் தூரத் தில் இருக்கிறது. அங்கு செல்ல நல்ல ரோடிருக்கிறது. பட்டடக்கல் ஊரை அடுத்து மல்லபிரபா நதி ஓடுகிறது. பட்டடக்கல், ஐகோளேயில் எல்லாம் தங்கும் வசதி கிடைக் காது. ஆதலால் பாதாமியில் உள்ள பிரயாணிகளின்