பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 விடுதியில் தங்கியிருந்துக் கொண்டே இத்தலத்திற்கு எல் லாம் சென்று வரவேண்டும். பட்டடக்கி சுரோலே என்று அன்று இன்றையப் பட்டடக்கல் வழங்கப்பட்டிருக்கிறது. பட்டடக்கல் அல்லது பட்டடக்கி சுரோலே என்றெல்லாம் ஏன் இந்த இடம் பெயர் பெற்றது என்று தெரியவில்லை. அந்த ஆராய்ச்சி யில் எல்லாம் ஈடுபடாமல் நாம் நேரே அந்த புகழ் பெற்ற விருபாrர் கோயிலுக்கே போய்விடுவோம். பட்டடக்கல் ஊர் மிகச் சிறிய ஊர். அங்குள்ளவர்கள் சின்னஞ்சிறு குடிசைகளிலேயே வசிக்கின்றனர். பெரிய வீதிகள் ஒன்றும் கிடையாது. ஊருக்குள் சென்றாலும் அங்கு ஒரு மரத்தடி யில் நான்கைந்து பேர் நிற்பர். அந்த இடம்தான் அந்த ஊரிலேயே விஸ்தாரமான இடம், அங்கேயே காரைவிட்டு இறங்கி கோயிலுக்குச் செல்லலாம். கோயில் மதில் சுவரெல் லாம் இடிந்து கிடக்கும். வாயில்களும் சிறியதாகவே இருக்கும். அந்த வாயில் வழியாக எல்லாம் நுழைந்து சென் றால் முதலில் ஒரு பெரிய கோவிலண்டை வந்து சேருவோம். அந்தக் கோயில் கிட்டத்தட்ட காஞ்சி கைலாச நாதர் கோயில் போலவே இருக்கும். ஆனால் காஞ்சியில் இருப்பதைப் போல ஒரு பெரிய திறந்த வெளியில் பல்லவர் மேட்டில் இந்தக் கோயில் இராது. இந்தக் கோயில்தான் இரண்டாம் விக்கிரமாதித்தன் காலத்தில், காஞ்சியி லிருந்து சென்ற சிற்பி குண்டன் என்ற திரிபுவனாச் சாரியார் மேற் பார்வையில் கட்டப்பட்டிருக்கிறது. இக் கோயில் கட்டியது 740-ம் வருடத்தில் என்று சரித்திர ஏடுகள்பேசுகின்றன. இக்கோயிலைக்கட்டிஅங்கு விருபாக்ஷர் என்ற சிவலிங்க வடிவை பிரதிஷ்டை பண்ணுவதற்கே தனக்கு பக்கபலமாக இருந்த தன்னுடைய பட்டமிகிஷி லோகமகாதேவியின் ஞாபகார்த்தமாக லோகேஸ்வரர் கோயில் என்றே பெயர் சூட்டியிருக்கிறான். இக் கோயில் நல்ல தமிழ் நாட்டுப் பாணியிலேயே கட்டப் பட்டிருக்கிறது. கோயிலை சுற்றிக் கொண்டு கீழ்புறம்