பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ዘዘ வாய்ப்டே இருந்ததில்லை. அம் மாமனிதரால் இவற்றைப் பார்க்கும் வாய்ப்பும்-இவற்றின் சிறப்பை ஹிந்தியிலிருந்து மொழி பெயர்த்துச் சொல்லும் பேறும் எனக்குக் கிடைத்தன. அவருடன் இரண்டு மாதங்கள், அவருட டைய நிழல் போல் இருக்கும் அரிய சந்தர்ப்பமும் அமைந்தது. உண்மையில் நான் வாழ்ந்த நாட்கள் அவைதாம். அவருடைய அற்புதக் கட்டுரைகள் அடங்கிய இந்நூலுக்கு முகவுரை ஒன்று வேண்டும் என்று என் அருமை மகளார் இராஜேஸ்வரி நடராஜன் வேண்டிய போது எனக்கு அத்தகுதி இல்லையாயினும், மறைந்த அம் மாமனிதருக்கு நான் செலுத்தும் காணிக்கையாகக் கருதி இப்பணியை மேற்கொண்டேன். தமிழ் இனம் இருக்கும்வரை அமரர் தொ. மு. பாஸ்கரத் தொண் டைமான் அவர்களுடைய பெயரும் இருக்கும். மறைந் தும் அவர்கள் வாழ்ந்து கொண்டயிருக்கிருர்கள். -த. கிளிதாகி பிரகாத் “கீதா ஹவுஸ்' 52. தேவாங்க உயர்நிலைப் பள்ளி சாலை கோயம்புத்துரர் - 6.41902.