பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 விருபாக்ஷர் கோயிலை ஒட்டி அதற்கு வடபுறம் இருப்பது மல்லிகார்ஜுனர் கோயில், இந்தக் கோயிலை யும் இரண்டாம் விக்கிரமாதித்தனே 740-ம் ஆண்டில் கட்டியிருக்கிறார். இக்கோயில் அக்காலத்தில் திரிலோ கேஸ்வர் கோயில் என்று பெயர் பெற்றிருக்கிறது. விக்கிரமாதித்தன் தனது இரண்டாவது பட்ட மகிஷி திரிலோக மகாதேவியின் பெயரால் இக்கோயிலை கட்டி யிருக்கிறான். இக்கோயிலும் விருபாக்ஷர் கோயில் போலவே தமிழ் நாட்டுக் கோயில்களின் பாணியில் கட்டப் பட்டிருக்கிறது. இக்கோயிலிலும் நிறைய சிற்ப வடிவங் கள் இருக்கின்றன. அமிர்தமத்தனம், சிவபார்வதி திருமணம், நடராஜர் அர்த்தநாரி, வாமனர் முதலிய வடிவங்கள் அற்புதச் சிற்பங்களாய் உருவாகி இருக் கின்றன. விரூபாrர் கோயிலுக்குத் தெற்கே 150 அடி தூரத்தில் பாபநாதர் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் விமானம் வடநாட்டுப்பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. ஆதியில் இக்கோயிலில்சூரிய நாராயணன் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார். பின்னரே சூரியன் வடிவினை எடுத்து விட்டு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இக்கோயிலில் உள்ள மூர்த்தியையே பாபநாதர் என்னும் அழைத்திருக்கிறார்கள். சிவன், விஷ்ணு, கணபதி கிருஷ்ணன், சூரியன் முதலிய சிற்ப வடிவங்கள் இக்கோயில் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. ராமாயண சித்திரங்களும் பல இங்கு இருக்கின்றன. இக்கோயில் 680-ஆண்டில் கட்டப்பட்டது என்று சரித்திர ஏடுகள் கூறுகின்றன. மல்லிகார்ஜூனர் கோயிலை அடுத்து அதன் வடபுறம் இருப்பது காசி விஸ்வேஸ்வரன் கோயில். இக்கோயிலில் விமானமும் வடநாட்டுப்பாணியில் தான் கட்டப் பட்டிருக்கின்றன. ஒன்றை விளக்க மறந்து விட்டேனே. இந்திய நாட்டின் கட்டிடக்கலை மூன்று பெரும்