பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வைத்து முடியிருக்கிறார்கள். கொண்டிகுடிகளுக்குப் பக்கத் தில் உள்ள கோயில் ஒன்றில் இரண்டு சிற்பவடிவங்கள். ஒன்று பிரம்மா, மற்றொன்று அனந்தநாரனர்.பிரம்மாவின் மூன்று முகங்கள் தெரிகின்றன. ஒருமுகம் பின்புறம் இருப்ப தாகக் கற்பனை. தாமரை மலரில் ஒரு காலை மடக்கி, மற். றொரு காலை தொங்க விட்டிருக்கும் அழகு பிரமாதமாக இருக்கிறது. நான்கு திருக்கரங்களுடன் இந்த நாரணர் திருமகன் நான் முகனைப் பார்த்தபோது இவன்தான், பின்னர் சோழமன்னர்கள் உருவாக்கிய பிரம்மாவிற்கு எல் லாம் அச்சாக இருந்திருப்பாரோ என்று எண்ண இடம் இருக்கிறது. திருவையாற்றை அடுத்த கண்டியூரில் உள்ள பிரம்மாவோ அல்லது தஞ்சைக் கலைக்கூடத்தின் நடுநாயக மாய் அமைந்திருக்கும் பிரம்மாவோ இங்கு எழுந்தருளி வந்: திருக்கிறாரோ என்ற பிரமைதான் ஏற்பட்டது. அனந்த நாராயணர் அவ்வளவு அழகாக இல்லைதான். இங்குள்ள கோயில்களில் எல்லாம் அழகான கோயில் துர்க்கை கோயில்தான். அதுதான் பெரிய கோயிலும் கூட, கோயில் எண்பது அடிநீளமும் முப்பது அடி அகலமும் உடையது. இக்கோயிலை அசப்பில் பார்த்தால் தாராசுரம் ஐராவதேஸ்வர் கோயில் போலவே இருக்கும். மாடக் கோயில் போல பத்தடி உயரத்திற்கு மேல்தான் கோயிலின் தளமே இருக்கிறது. முன்மண்டபம் நல்ல ராஜகம்பீரன் மண்டபம் போலவே இருக்கிறது. அது 24 அடி நீளம் இருக் கிறது. மண்டபத்தின் துரண்களில் எல்லாம் எண்ணிறந்த சிற்பவடிவங்கள் ரிஷபாந்திகரான சிவன், கருடவாகன விஷ்ணு, மகிஷமர்த்தினி, வராக மூர்த்தி எல்லாம் உருவா யிருக்கிறார்கள். எல்லாம் பெரிய வடிவங்கள், சிறந்த வடிவங்களும் கூட, வழக்கம்போல தூண்களில் பல. ஆடவரும் பெண்டிரும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறார் கள். உள் கோயிலைச் சுற்றி வெளியே நல்ல வராந்தா போட்டது போல் கோயிலை அமைத்திருக்கிறார்கள். இக் கோயில் சிகரம் சிறியதுதான். அதுவும் சிதைந்திருக்கிறது.