பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 மூன்று பெண்களின் தலை தெரிகிறது: அவர்களே கங்கை, யமுனை, சரஸ்வதி என்கின்றனர். ஆம் கங்கா தரனான சிவன், கங்கையை தலையில் ஏற்றபோது யமுனையையும் சரஸ்வதியையும் சேர்த்துத்தானே ஏற் றிருக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறார்கள் சிற்பி. அந்தக் கற்பனை இப்படி வடிவெடுத்திருக்கிறது. இன்னும் ஒரு குடைவரை, மலையின் அடுத்தப்பக்கத் தில் அதையே மீனாபஸ்தி என்கின்றனர். இது சமணக் குடைவரை இங்குள்ள பிரதான மூர்த்தி பார்சவநாத சேஷபாணி. நாகநாகினியருடன் உருவாகியிருக்கிறார்கள். இங்கு விதானத்தில் ஒரு பெரிய தாமரை நடுவிலும். நான்கு மூலைகளில் நான்கு சிறு தாமரைகளும் செதுக்கப்பட்டிருக் கின்றன. இருக்கின்ற இடைவெளியில் எல்லாம் மீன்கள். இப்படி ஒரு சிற்பக்கோலம் இக்குடைவரை வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் கம்பீரமாக மணி மகுடம் அணிந்து நிற்கின்றனர். முன்னர் கோயிலில் கண்ட சிற்ப வடிவங்களை விட இக்குடைவரையில் காணும் சிற்பங்கள் அழகானவை. இச்சிற்பவடிவங்கள்தாம், பின்னர் தமிழ் நாட்டில் பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களுக்கு எல்லாம் ஆதர்சமாக இருத்திருக்க வேண்டும். ஆம், தமிழன் நல்லது எங்கே இருந்தாலும் அதை எடுத்து அதற்கு ஒரு தனித்தன்மையையும் அளித்து அதனைத் தன்னதாக்கிக் கொள்வானே. ஐஹோளே குடைவரையில் இருக்கும் போது, ஏதோ தமிழ்நாட்டின் குடைவரை ஒன்றில் தானிருக்கிறோம் என்ற பிரமையே தோன்றும்.