பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பீஜப்பூர் கோல்கும்பஸ் சமீபத்தில் ஒரு ஊரில் உள்ள கோயில் வாயிலில் ஒரு பெரிய கோபுரம் கட்டியிருந்தனர். (ஆம்! பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாதல்லவா) அந்தக் கோபுரத் திறப்பு விழாவிற்கு ஒரு மந்திரியையும் அழைத் திருந்தனர். என்னையும் அந்த விழாவிற்குத் தலைமை தாங்கும்படி கேட்டிருந்தனர். விழா ஆரம்பத்தில் உரை நிகழ்த்திய அமைச்சர் சொன்னார், நமது கோயில்களில் எல்லாம் மேளமும், தாளமும், கும்பலும் கூச்சலும் நிறைந் திருக்கிறது. ஆதலால் அங்கு சென்றால் மன அமைதி கிடைப்பதில்லை. ஆனால் முஸ்லீம்களின் மசூதிகளுக்கோ, கிருஸ்தவர்களின் சர்ச்சுக்கோ சென்றால் எல்லாம் அமைதி யாக நடக்கிறது. அதனால் மனதிற்குமே ஒரு சாந்தி கிடைக்கிறது. ஏன் நமது கோயில்களிலும் அந்த அமைதியை உருவாக்கக் கூடாது என்பது அமைச்சரது கேள்வி. இதனைக் கேட்ட கூடியிருந்த ஆஸ்திகப் பெரு மக்கள் மனம் வருந்தினர். அவர்களது வருத்தத்தைப் போக்க வேண்டியது தலைவனான எனது கடமையாக இருந்தது. நான் தலைமையுரையில் சொன்னேன். நமது கோயில்களில் எல்லாம் பூசனைக் கிரமங்கள், ஆசார நியமங்கள் எல்லாம் உண்டு. அவைகளை எல்லாம் நடத்த இன்னிசையும் தோத்திரங்களும் உதவுகின்றன. அதனல் தானே நம் நாட்டுக் கோயில்களையும் அங்கு நடக்கும் ஆசார நியமங்களையும் நன்கறிந்த மணிவாசகப் பெருமான், இறைவனைத் துயில் எழுப்பும் பாணியில் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார். அதில் அவர், இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணை மலர்க்கையினர்