பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சார்சானிக்கலை என்னும் ஒரு தனித்துவம் இருக்கிறது. பின்னர் இந்த சார்சானிக் கட்டிடக்கலை இந்தியக் கட்டிடக்கலையோடு இணைந்து ஸ்து பிகளாகவும், மினாரட்டுகளாகவும் உருப்பெற்று இந்திய சார்சானிக் கலை என்றே பெயர் பெற்றிருக்கிறது. அதனால்தானே பிரபல கலை விமர்சகர்களில் ஒருவரான பெர்சி ப்ரெளன் என்பவரும் இந்தியக் கட்டிடக்கலையைப் பற்றி எவ்வளவு விரிவாக எழுதினாரோ அப்படியே இஸ்லாமியக் கட்டிடக் கலையைப் பற்றியும் விரிவாகவே எழுதியிருக்கிறார். அத்தகைய இஸ்லாமியக் கட்டிடக் கலையின் விளக்கம் ஒன்றைக் காண நாம் நர்மதைக்கு வடக்கேதான் போக வேண்டும் என்றில்லை. நர்மதைக்குத் தெற்கேயும் இன்றைய மைசூர் ராஜ்யத்தில் உள்ள பீஜப்பூரிலுமே பார்க்கலாம். முன்னமேயே சீரங்கப் பட்டணத்தில் திப்பு சுல்தானின் வசந்த மாளிகைகள் தரியா தெளலத்தைப் பார்த்திருக் கின்றோம். அதன் அழகைக் கண்டு வியந்திருக்கின்றோம். இப்போதே பீஜப்பூர் சென்று அங்குள்ள முஸ்லிம் கட்டிடக் கலையின் சிறப்பைக் கண்டு வியந்து நிற்கப் போகிறோம். ஆம் இன்று அந்த பீஜப்பூர் என்னும் விஜயபுரிக்கே செல் கிறோம். பாதாமியிலிருந்து பாகல்கோட் சென்று அங்கிருந்து ஹோலஸ்பூர் என்னும் வழியில் பீஜப்பூர் இருக்கிறது. சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் ரயிலில் ஏறி ஹோட்கி ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து கடக் செல்லும் ரயிலில் ஏறி பீஜப்பூர் ஸ்டேஷனில் இறங்கலாம். இந்த பீஜப்பூர் ஹோட்கிக்கு 56 மைல் தெற்கிலும் கடக்குக்கு 134-மைலுக்கு வடக்கிலும் இருக்கிறது. ஆதிகாலத்தில் இந்த ஊரை விஜயபுரி என்றே அழைத்திருக்கின்றனர். இதிலிருந்தே இது சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊர் என்பதை நாம் அறிதல் கூடும். விஜயபுரிதான் பின்னர் பீஜப்பூர் என்று திரிந்திருக்கிறது. ஊருக்குள் செல்லும் முன் இந்த ஊரின் சரித்திரத்தையும் கொஞ்சம் தெரிந்து