பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 கொள்ளலாம்தானே. கி. பி. பதினோராம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தை சாளுக்கிய மன்னர்கள் ஆண்டு. வந்திருக்கிறார்கள். அப்போது இந்த விஜயபுரி பிரசித்தி பெற்றிருந்திருக்கிறது. அதன் பின்னர் 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18-ம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் தேவகிரியை ஆண்டு வந்த யாதவர்கள் கைக்கு இந்த விஜயபுரி மாறியிருக்கிறது. அலாவுதீன் கில்ஜி டில்லியில் இருந்து அரசாண்டபோது அவரது படைத்தலைவன் மாலிக்காபூர் தென்னாடு நோக்கிப்படை எடுத்திருக்கிறார். 1310-ல் நடந்த அந்தப்படை எடுப்பில் வெற்றியும் கண்டி ருக்கிறார்கள். அவர் அங்கு ஒரு ராஜ்யத்தை நிறுவியிருக். கிறார். அதுவே பாமினி ராஜ்யம் என்று சரித்திர ஏடு களில் பிரசித்தி பெற்றிருக்கிறது மாவிக்காபூரின் மகனான கரிமுத்தின் இந்த பிரதேசத்தில் கவர்னராக இருந்து ஆண்டிருக்கிறார். அவனே பீஜப்பூரைத் தன்னுடைய தலைநகராக ஆக்கிக் கொண்டிருக்கிறான். பின்னர் பாமினி ராஜ்யத்தில் இருந்த ராணுவத்தின் தலைவர்களுள் பிளவுகள் ஏற்பட்டு ஒவ்வொருவரும் தாங்கள் இருந்த, பகுதியை தங்களுடைய ராஜ்யம் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஆண்டிருக்கிறார்கள். அப்போது பீஜப்பூரில் இருந்தவன் அடில் ஷா, அடில்ஷாவை போலவே நைஜாம்ஷா அகமத் நகரிலும், குலி குதுப்ஷா என்பவன் கோல் கொண்டாவிலும் தனியரசு செலுத்தி வந்திருக் கின்றனர். இவர்களில் அடில்ஷாநைஜாம்ஷாவின் மகளாகிய சாந்த்பீபியை மணந்து, பரால்கோட் என்ற இடத்தையும் சீதனமாகப் பெற்றிருக்கிறார். இதன்பின் கிட்டத்தட்ட இருநூறு வருஷம் அடில்ஷாவின் வம்சத்தினர் பீஜப்பூரி லிருந்து அரசாண்டிருக்கின்றனர். பின்னர் மொகலாய சக்கரவர்த்தியான ஒளரங்கசீப் பீஜப்பூர் சுல்தானான சிக்கந்தரை வென்று பீஜப்பூரை தன் ராஜ்யத்திற்கு, கொண்டு வந்திருக்கிறார். இது நடந்தது 1686-ல், மொகலாய சாம்ராஜ்யத்தின் கீழிருந்த பீஜப்பூரைத் தான் 1724-ல் ஹைதராபாத் நைஜாம் ை ப்பற்றியிருக்