பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கிறார். பிறகு அது மகராஷ்டிராவின் கைக்கு மாறி இருக்கிறது. 1818.ல் இந்த பீஜப்பூர் வெள்ளைக்காரர் ஆளுகைக்குள் வந்திருக்கிறது. பம்பாய் மாகாணத்தில் ஒரு ஜில்லாவாக இருந்த பீஜப்பூர் மொழிவாரி ராஜ்யங்கள் அமைத்தபோது மைசூர் ராஜ்யத்தோடு இணைந்திருக் கிறது. இந்த நகரில் உள்ள பிரபலமான கட்டிடங்கள் எல்லாம் அடில்ஷா வம்சத்தினர் கட்டியவைகளே, அடில்ஷா வம்சத்தினர் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஆட்சியின் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு பெரிய மசூதி யைக் கட்டியிருக்கின்றனர். முந்திய சுல்தான் கட்டியதை விட தான் கட்டுவது சிறப்பாக இருக்க வேண்டும் என்று போட்டி போ ட் டு க் கொண்டு ஒவ்வொருவரும் கட்டியிருப்பதால் ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக இருக்கிறது. எல்லா மசூதிகளையும் ஒரே இடத் தில் கட்டியிருக்கிறார்கள். இந்த மசூதிகளையெல் லாம் சுற்றி ஒரு பெரிய கோட்டையையும் கட்டியிருக் கிறார்கள். இந்தக் கோட்டைச் சுவரின் கீழ் மேல் நீளம் 19000 அடி தென்வடல் அகலம் 1600 அடி. கோட்டைச் சுவரின் நான்கு பக்கத்திலும் நான்கு வாயில்கள் அமைத் திருக்கிறார்கள் தென்பக்கத்து வாயில் தான் பிரதான வாயில் இதனையே பட்டேகேட் என்கின்றனர். ஒளரங்கசீப் இந்த வாயில் வழியாகத்தான் கோட்டைக்குள் புகுந்திருக் கிறான். நாமும் இன்று காரிலேயே இந்த வாசல் வழியாக உள்ளே நுழையலாம். கோட்டைக்குள் இருக்கும் மசூதி களில் முக்கியமானது கோல்கும்பஸ் என்பதுதான். இது கட்டிடக் கலையிலே ஒர் அரிய சாதனை. 17-ம் நூற்றாண் டின் முற்பகுதியில் பீஜப்பூரில் இருந்து ஆண்ட அடில்ஷா அதனை க் கட்டியிருக்கிறார். இது ஒரு சதுரமான கட்டிடம். 18000 சதுர அடியில் இது கட்டப்பட்டிருக் கிறது. நான்கு மூலைகளிலும் எட்டுப் பட்டையுடன் கூடிய ஒரு மாடத்து பி இருக்கிறது. இதில் எல்லாம் மேலே ஏறிப்போக படிக்கட்டுகள் உண்டு. இக்கட்டிடத்