பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

kř கயவர்கள் கூட்டத்திலே ஒரு மாணிக்கம் என் உயிர் நண்பர் பாஸ்கரன்! . ரெவினியூ இன்ஸ்பெக்டர் என்ற பதவியிலிருந்து அவரை நெருக்கமாகவே எனக்குத் தெரியும், கலெக்டர் ஆகிறவரை. அடேயப்பா! அத்தனை மாறுதல்களுக்கு நடு விலும் அதே பாஸ்கரன். அதே சிரிப்பு, அதே அன்பு, "அதே நேய நெருக்கம், அதே மனிதர்! ஆகா அப்படிப் ப்ட்ட மனிதர் இன்னொருவரை நான் கண்டதில்லையே! எளிமை, நேசம், எந்தச் சூழ்நிலையிலும் மாருத ஒரே நிலையான தனித் தன்மை, உற்சாகம், உல்லாசம் இத்தனையும் சேர்ந்த ஓர் அற்புத மனிதர்தான் நண்பர் பாஸ்கரன். இந்த அற்புதமாகிய “பாஸ்கரம்' என்ற பண்டை இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அப்ப டியே காண்கிறேன். கண்டு களிக்கிறேன். எளிமை அருமை, இனிமை, மாருத தனித்தன்மை. வேங்கடத்துக்கு அப்பால்' என்ற இந்தக் கட்டுரை கள் எதைப் பேசுகின்றன என்பதை.இங்கே நான் சொல்ல வில்லை. காரணம் அதை நீங்களே நூலுக்குள் படிக்கப் போகிறீர்கள். ஆனல் நூலிலே நின்று பேசுகிற குரலின் ஒலிப்பண்பு என்ன, அந்தக் குரல் கிளம்பி வருகிற உள் ளத்தின் பண்பு என்ன என்பதையே இங்கு அடிக்கோடு போட்டுச் சொல்லுகிறேன். அணிந்துரை என்பதன் நோக்கமே அதுதான். ஒப்பற்ற மனிதரின், ஒப்பற்ற ரசிக உள்ளத்தின் ஒப்பற்ற கட்டுரைகள் இவை. இவற்றிலே பாஸ்கரனின் முகம் தெரிகிறது; அவருடைய வீச்சு நடை தெரிகிறது; அந்த உல்லாசம் அப்படியே டொங்கு புனலாக விம்மி வருகிறது. நல்ல இலக்கியத்துக்கு இதற்குமேல் என்ன தகுதிகள் வேண்டும்? பாரத தேசத்தின் ஒருமைப்பாடு அதன் கலைகளிலும், இலக்கியச் சிந்தனைகளிலும், இவற்றின் பண்ணைகளாகிய