பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மாக கட்டினார் என்பர். இதன் தரை நன்றாக பூசப்பட்டுப் பளபளப்பாக இருக்கும். குறுக்கும் நெடுக்கும் கோடுகள் போட்டு பிரார்த்தனைக்கு வரும் அனைவருக்கும் இடம் வகுத்திருக்கிறார்கள். ஒரே தடவையில் 2000 பேர்கள் இருந்து பிரார்த்தனை செய்யக்கூடும் என்றால் அது எவ்வளவு விசாலமானதாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்தானே. இன்னும் இங்கு காண வேண்டியவை கான் மஹல், சாத்மன்சீல் முதலியன. அடில்ஷா வம்சத்தினர் இருந்து தர்பார் நடத்திய இடம். இந்த தர்பார் மண்டபத்தில் சிக்கந்தர் முகலாய சக்கரவர்த்தி ஒளரங்கசீபினிடம் சரணா கதியடைந்திருக்கிறார். சாத்மன்சீல் என்பது ஏழுமாடிக் கட்டிடம். ஏழுநிலை மாடம் என்றெல்லாம் சரித்திரங்களில் கேட்கிறோமே அந்த ஏழுநிலை மாடம் இதுதான். இந்த ஏழுநிலை மாடத்தில் மட்டும் ஏறி நின்று பார்த்தால் பீஜப்பூர் முழுவதையுமே பார்த்து விடலாம். இன்னும் இங்கேயே இரண்டு பழைய பீடங்கள் ஒன்று 22 அடிநீளம், மற்றொன்று 14 அடி நீளம். ஆனால் இந்த அணு யுகத்தில் இந்த பீரங்கிகள் என்ன பிரமாதம் என்றுதான் தோன்றும் இன்று. இந்த ஊரை விட்டுக் கிளம்புமுன் நாம் பார்க்க வேண்டிய கட்டிடம் தான் இப்ராஹிம் ரூசா என்பது. இது ஊருக்கு மேல் கோடியில் இருக்கிறது. அங்கு இரண்டு கட்டிடங்கள் உண்டு. ஒன்று மசூதி. மற்றொன்று சமாதி. இந்த சமாதிக் கட்டிடத்தில் தான் முதலாம் இப்ராஹிம் அவரது மனைவி, மக்கள் எல்லோரும் சமாதியாயிருக் கின்றனர். இங்கு சுவர்களில் எல்லாம் குரானிலிருந்து பல வாக்கியங்கள் எ ழு தி யி ரு க்கிறார்கள். இதனையே தகதினத்து தாஜ்மஹால் என்று அழைக்கின்றனர். அசப்பில் தாஜ்மஹாலைப் போலவே கட்டப்பட்டிருப்பதாகத்