பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 தோன்றும். இந்த சமாதிக்கும் மசூதிக்கும் இடையே ஒரு குளம் வெட்டியிருக்கிறார்கள். இந்த பீஜப்பூர் ஜில்லாவிலே நான்கு நதிகள் பாய் கின்றன. கிருஷ்ணா, பீமா, கடப்பிரபா, மல்லப் பிரபா என்பவை அவை. இப்படி நீர்வளம் இருந்தாலும், இப்ராஹிம் ரூசா நிலவளம் அதிகம் உடைய நாடு அல்ல இது. இங்குள்ள மண் நல்ல கருத்த கரிசல் மண்தான். ஆதலால் பருத்தியே இங்கு விளையும் பொருள்களில் முக்கியமானது. பீஜப்பூர், பருத்தி மார்க்கெட்டிற்கு ஒரு சிறந்த இடம் என் கின்றனர்.