பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 அதனால் பின்னர் அன்னையும் பி த ா வு ம் முன்னறி தெய்வம்" என்று தெய்வமாகவே பெற்றோரை உயர்த்திக் கூறினார்கள். இப்படி எல்லாம் சொல்லியிருந்தும் மக்களில் பெரும்பாலோர் தாய் தந்தையரை மதிக்கிறதில்லை. அதிலும் ஆடவர் எல்லாம் தத்தம் மனைவியருக்கு அடங் கியவராய் தந்தை தாயாரைப் பேணுவதையே நிறுத்தி விடுகிறார்கள் ஆனால் தந்தையையும் தாயையும் தெய்வ மென மதிப்பவர்களை தெய்வமுமே மதிக்கும், அவர் சொற்படி கேட்கும் என்பதை விளக்கவே ஒரு கதை மராத்திய நாட்டில் வழங்கிவருகிறது. ஜானு தேவர் என்று ஒரு மராத்திப் பிராமணர். அவ ருக்கு சந்தியாதேவி என்று ஒரு மனைவி இருவரும் சிறந்த விஷ்ணு பக்தர்கள். இருவரும் தவமிருந்து பெறுகின்றனர், ஒரு மகனை. புண்டரீகன் என்று அவனுக்குப் பெயரிடு கின்றனர். அவனை வ ள ர் த் து வாலிபமாக்கினர். தக்கதொரு பெண்ணையும் அவனுக்கு மணம் முடித்து வைக்கின்றினர். அவ்வளவுதான். மனைவி கீறிய கோட் டைத் தாண்டாதவனாக புண்டரீகன் வளர்கிறான். தாய் தந்தையரை உதாசீனம் செய்கிறான். அதனால் மணம் உடைந்த பெற்றோர் இருவரும் காசியாத்திரை புறப்படுகி. றார்கள். புண்டரீகனும் மனைவியும் உடன் சென்று வழியிலும் பெற்றோரைத் துன்புறுத்துகிறார்கள். காசி சென்று அங்குள்ள குக்குட முனிவர் ஆசிரமத்தில் தங்குகி றார்கள். அம்முனிவரின் ஆசிரமத்திற்கு ஒவ்வொரு நாளும் அதிகாலையில் மூன்று பெண்கள் வந்து திரும்புகின்றனர். அழுக்கான உடையோடு வரும் அவர்கள், முனிவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு திரும்பும்போது புனிதமான உடையோடும் காந்தி பொருந்திய முகத்துட னும் திரும்புகின்றனர். இதைப் பார்க்கிறான் புண்டரீகன், பெண்களை நெருங்கி அவர்கள் யாரென விசாரிக்கிறான். விசாரித்ததில் அவர்களே கங்கை, யமுனை, சரஸ்வதி என் தும், பலரும் தங்களிடம் மூழ்கிப் பாபச்சுமையைக் கழிப்ப