பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 தால்தாங்கள் அழுக்கடைவதாகவும், அந்தமாசுகள் எல்லாம் குக்குட முனிவருக்குப் பணிவிடை செய்வதால் அகல்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள். குக்குட முனிவரிடம் எப்படி அவ்வளவு புனிதத்தன்மை இருக்கிறது என்று விசாரித்த போது, அவர் தம் பெற்றோருக்குச் செய்யும் கைங்கரி யத்தை ஒழுங்காகச் செய்வதால் பெரியபேறு உடையவர் என்று தெரிகிறது. அன்றைய தினத்திலிருந்து புண்டர் கனும் அவன் மனைவியும் தந்தை தாயாரைப் பணிந்து அவர்களுக்கு வேண்டும் பணிவிடைகளைச் செய்வதில் முனைகிறார்கள், திரும்பித் தங்கள் ஊருக்கு வந்து வாழ்வில் ஒரு புதிய அத்யாத்தையே ஆரம்பிக்கிறார்கள். இதே சமயத்தில் துவாரகையில் இருந்த பராந்தா மனுக்கும் ருக்மணிக்கும் ஒரு பிணக்கு ஏற்படுகிறது. ருக்மணி தன் கணவனைப் பிரிந்து புண்டரீகன் வசிக்கும் பகுதிக்கு வந்து தவம் புரிகிறாள் அவளைத் தேடிக் கொண்டு வைகுண்டபதியும் அங்கு வருகிறார். இருவரும் இணைந்து புண்டரீகன் இருந்த குடிலுக்கு வருகிறார்கள். வந்து தங்களை இன்னார் என்று அவனிடம் அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள். அவனோ தாய் தந்தை யருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறான். ஆதலால் ஒரு செங்கல்லை எடுத்துப் போட்டு, இதில் கொஞ்சம் நின்று கொண்டிரும், ந ா ன் எ ன் பெற்றோருக்குச் செய்யும் பணிவிடைகளை எல்லாம் முடித்துவிட்டு வருகிறேன்' என்று சொல்லி விடுகிறான். அந்தப் பக்தன் சொற்படியே பரந்தாமனும் அந்தச் செங்கல்லின் மேலேயே நின்று கொண்டிருக்கிறான். தாய் தந்தையருக்கு செய்யும் பணிவிடைகளை எல்லாம் முடித்துவிட்டே புண்டரீகன் வந்து பரந்தாமனை வணங்கி உபசரணை செய்கிறான். பின்னர் அவன் விரும்பியபடியே அவன் எடுத்துப் போட்ட செங்கல்லின் பேரிலேயே நின்று இன்றும் சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார். அவரே விட்டோபா. மராத்தியில் விட் என்றால் செங்கல்.