பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 நம் தமிழ் நாட்டில் செல்வதுபோல தேங்காய் பழம் வெற்றிலைபாக்கு எல்லாம் எடுத்துப்போக வேண்டாம். கொஞ்சம் மீட்டாய் மாத்திரம் வாங்கி எடுத்துப் போய் ஆராதனை செய்து பிரசாதமாகக் கொண்டு வரலாம். மீட்டாய் எல்லாம் நல்ல சர்க்கரை மீட்டாயாகத்தான் இருக்கும். பாண்டுரங்கன் கோயில் பெரிய கோயில். இதன் மேல் 300 அடிநீளமும் தென்வடர் 170-அடி அகலமும் உள்ளது. இக்கோயிலுக்கு கிழக்கிலும் மேற்கிலும் மூன்று மூன்று வாயில்கள். வடக்கும் தெற்கும் ஒவ்வொரு வாயில் தான். இப்படி எட்டுவாயில்கள் இருந்தாலும் கீழ்புறம் உள்ள பிரதான வாயில்வழியாகத்தான் உள்ளே நுழைய வேண்டும். அதைத்தான் நாம தேவர் வாயில் என்பர். நாம தேவர் என்னும் மராட்டிய பக்தர் பாண்டுரங்கனிடம் யாசித்த பேறு இதுதான், எப்போதும் உமது திருவடியி லேயே இருக்க வேண்டும், உம்மைத் தரிசிக்க வரும் பக்தர் களது பாததுரளி எல்லாம் என் சிரமேல்படிய வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டாராம். அதன்படியே அவர் அமர ரான பின்னும் அவரை இந்த வாயிலிலேயே அடக்கம்செய் திருக்கிறார்கள் என்கின்றனர். இந்த வரலாற்றைக் கேட் டதும், நமக்கு குலசேகராழ்வார் வேங்கடவனிடம் செய்து கொண்ட பிரார்த்தனைத் தான் ஞாபகத்துக்கு வரும். செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடக்தியங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே ! என்றுதானே பெரிய திருமொழியில் அவர் பாடி இருக் கிறார். ஆனால் நாமதேவர் விருப்பம் பரிபூரணமாக நிறை வேறிவிட்டது என்று சொல்லமுடியாது. இன்றைய பண்