பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 டாக்கள் நாமதேவர் தலையை மட்டும் சிலையாக செய்து, அதற்கு செப்புக்கவசம் அணிந்து வாயிலில் வைத்து, அத் தலையினைக்காட்டி காசுபறிக்கின்றனர். செல்லும் பக்தர் களோ நாமதேவரை நினைந்து அந்தப் படியை மிதியா மலே அடுத்த படியில் எட்டிக் காலடி வைத்து கோயிலுள் சென்று விடுகின்றனர். இந்தப் படிகளைக் கடந்து சென் றால் ஒரு சிறுமண்டபம். அதனையே முக்தி மண்டபம் என் கின்றனர். அதனை அடுத்தே 120-அடி நீளமும் 60-அடி அகலமும் உள்ள கூடம், அதற்கும் அப்பால் மரத்தால் கட்டப்பட்ட சபாமண்டபம். அதில் கருடாழ்வார், ஆஞ்ச னேயர் கோயில்கள் இருக்கின்றன. இங்கே ராமபக்தியில் சிறந்தவரான சமர்த்த ராமதாஸரை பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். பெரிய ஹனுமார்விக்கிரகம் ஒன்றும் இருக்கிறது. இம்மண்டபத்திலிருந்து கோயிலுள் செல்ல மூன்று வாயில்கள். நடுவாயிலில் துவாரபாலகர்கள், இருவர். அவர்களை அடுத்து விநாயகரும் சரஸ்வதியும் தரிசனம் கொடுப்பர், இந்த வாயில் கடந்தால் உள்ளேயுள்ளபதினாறு கால் மண்டபம். அந்த மண்டபத்தின் ஒரு துணையே வெள்ளித் தகட்டில் பொதிந்து வைத்திருக்கிறார்கள். அதில் உள்ள புண்டரீக வரதனை பக்தர்கள் ஆலிங்கனம் செய்தே, அருள் பெறலாம். இதற்கடுத்து ஒரு சிறு மண்டபம், அதை யும் கடந்தே கருவறை செல்ல வேண்டும். அதில் நுழைய அமைத்திருக்கும் வாயில் மூன்றடி உயரமே. ஆதலால் நன்றாகத் தலை வணங்கியே செல்ல வேண்டும். கருவறை எட்டுச் சதுர அடி விஸ்தீரணமே உடைய சிறு அறை. அதில் மேல் கோடியில் வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லின் பேரில் ஏறி நின்று கொண்டிருக்கிறார் விட்டலர். மூர்த்தி நல்ல கருங்கல் வடிவினர். இடுப்பில் இரண்டு கையையும் வைத்து மிடுக்காகவே நிற்பார். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்த விட்டலர் சிரசின் மீது சிறிய சிவலிங்கம் ஒன்று இருக்கக் காண்போம். நாம்