பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ν: கோவில்களிலுமே பாதுகாவலோடு மூச்சு விடுகிறது. பாரத உயிர் இந்தக் கோயில்களிலே பாரத உயிராகவே உயிர்க்கிறது. பாரதம் எங்கே இருக்கிறது என்ற கேள் விக்கு ஒரே விடை வேங்கடத்துக்கு இப்பாலும் வேங் கடத்துக்கு அப்பாலும் உள்ள கோயில்களில் கொலு விருக்கிறது என்பதே! அந்த விடை மொழிக்கு நடை மொழியிலே கட்டப் பெற்ற ஓர் அழகான சொற் கோயிலே இந்த நூல். கற்கோயிலைச் சொற்கோயிலாக நிறுத்துகிறது என் நண்பர் பாஸ்கரனின் இரசவாதத் தமிழ். அதைப் படித்துப் படித்து மகிழ்கிறேன். நீங் களும் அவ்வாறே மகிழுங்கள் என்று சொல்லி இந்தச் சொற் கோயிலுககுள்ளே உங்களுக்கு நல்வரவு கூறு கிறேன். மீ. ப. சோமசுந்த சிவம் 'பச்சை” ஏ ஐl122 எட்டாவது நேர் சாலை சென்னை-600 4ே0