பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கேட்க விரும்பிய மல்லிகார்ச்சுனர் மேற்கேயே திரும்பி யிருக்கிறார். ஆதலால் கோயிலே இன்று மேற்கு நோக்கிய, சந்நிதியோடுதான் இருக்கிறது. பாண்டுரங்கன், விட்டலனாக எழுந்தருளுவதற்குக் காரணமாயிருந்த புண்டரீகருக்கும் ஒரு கோயிலிருக்கிறது. இது பாண்டுரங்கன் சந்நிதிக்கு நேராக சந்திரபாகா நதியின் மத்தியில் கட்டப்பட்டிருக்கிறது. ஆற்றில் வெள்ளம் வரும்போது தோணியில் ஏறிச்சென்றே பூஜை செய்து வருவார்கள் அர்ச்சகர்கள். - பண்டரிபுரத்திற்கு தெற்கே சந்திரபாகா நதியின் மேல் கரையில் கோபால்பூர் என்னும் சிறிய ஊர் இருக்கிறது. இங்கு கோபால கிருஷ்ணன் கோயில் ஒன்று பெரிய மாடக் கோயிலாக இருக்கிறது. பலபடிகள் ஏறிச் சென்றுதான் வேணு கோபாலனாக நிற்கும் கிருஷ்ணனை வணங்க வேண்டும். அன்று துவாரகையில் இருந்து புறப்பட்டு வந்த ருக்மணி தங்குவதற்குத் தேடி எடுத்த இடம் இதுதான் என்றும் இங்கேயே யசோதை, நந்தகோபன் முதலிய எல்லோருமே வந்து சேர்ந்து விட்டார்கள் என்றும் கதை சொல்கிறார்கள். பாண்டுரங்கனிடத்துப் பக்தி கொண்டிருந்தவர்களில் சக்குபாய் என்பவள் ஒருத்தி. அவளை மாமன் மாமியார் மிகவும் துன்புறுத்தியிருக். கின்றனர். அவள் பண்டரிபுரம் சென்று வரும்வரை பாண்டுரங்கனே சக்குபாயின் வடிவம் தாங்கி, மாமன் மாமியார் இடும் கட்டளைகளையெல்லாம் செய்திருக் கிறார். சக்குபாய் ஆட்டிய ஆட்டுரல், அரைத்த அம்மி என்றெல்லாம் இக்கோயில் பிரகாரத்தில் பலவற்றைக் காட்டுவர். பக்தையின் துயரம் துடைக்க விரைந்த பாண்டுரங்கனின் பெருமையை என்னென்பது? . இந்த பண்டரிபுரத்திலே நல்ல குங்குமம் கிடைக்கின் றது. நைவேத்தியத்திற்கு மிட்டாய் வாங்கும்போதே அர்ச்ச கர்களிடம் நல்ல குங்குமம் வாங்கிக் கொள்ளலாம். ஒரே