பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 ராஜ்யத்தையே நிறுவியிருக்கிறார். அவன், அன்னை பவானியை ஆராதித்து, பூனா என்னும் இடத்தையே தன்னுடைய கேந்திர ஸ்தானமாக அமைத்து வாழ்ந்திருக் கிறான். கருநாடக ராஜ்ஜியத்தையும் வென்று தன் ராஜ். யத்தை விஸ்தரித்திருக்கிறான். இந்த சத்ரபதி சிவாஜியால் புகழ் பெற்ற நாட்டையும் அவன் வணங்கிய அன்னை பவானியையும் காண வேண்டும் என்றால் நாம் பூனா என்னும் நகரத்திற்கே செல்ல வேண்டும். இன்றைய மகாராஷ்டிர ராஜ்யத்திற்கு தலைநகர் பம்பாய்தான் என்றாலும், மராத்திய மக்கள் நிரம்பிய நகராகவும், பால கங்காதர திலகர் போன்ற பெரிய தேசத் தலைவர்கள் வாழ்ந்த நகரமாகவும் இருப்பது பூனா பட்டணமே. அந்த பூனா என்னும் புண்ணிய நகரத்திற்கே செல் கிறோம் நாம் இன்று. பூனா செல்ல மதராஸிலிருந்து பம்பாய் செல்லும் ரயிலில் ஏறி பூனா ஸ்டேஷனிலேயே இறங்கலாம்" பம்பாய்க்குத் தெற்கே 120-மைல் தொலைவில் இந்த நகரம் இருக்கிறது. பூனா நகரத்தின் ஆதிப்பெயர் புண்ணிய நகரம் என்பதேயாகும். அன்னை பவானி, சத்ரபதி சிவாஜி, லோகமான்ய திலகர் போன்றவர்களை தன்னகத்தே கொண்ட நகரம், நாளடைவில் புண்யா என்றே அழைக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் வாரத்தில் உள்ள கிழமைகளின் பெயரால் சனிவார் பேட், ரவிவார் பேட், சோமவார்பேட், மங்களவார்பேட், புதவார்பேட், சுக்கிரவார்பேட் என்றெல்லாம் பல பகுதிகள் இருப்பது உடன் இன்னும் சதாசிவபேட், கணேசபேட், ராஸ்தர் பேட், பவானிபேட் என்னும் பெயரோடும் பல பகுதிகள் இருக்கின்றன. நாம் இங்குள்ள பேட்டைகளையும் அங்குள்ள கடைகளையும் பார்க்க வந்தவர்கள் அல்லவே! நாம் rேத்திராடனம் அல்லவா துவங்கியிருக்கிறோம். அதனால் விறுவிறு என்று சுற்றி அங்குள்ள கோயில் களை எல்லாம் தரிசித்து விடலாம். நாம் முதலி