பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 அதற்கு பால் சொரிந்து வழிபாடு செய்திருக்கின்றனர். பின்னர்தான் ஜீஜபாய் கோயில் கட்டி பிரபலப் படுத்தி இருக்கிறார். இன்று மகாராஷ்டிரர்களுக்கு அன்னை பவானியைவிட ஆதி உத்கிருஷ்டமான தெய்வம் இக் கணபதியே, கல்யாணம் முதலிய எல்லாச் சுபகாரியங்களில் எல்லாம் முதல் தாம்பூலம் இந்த கணபதிக்குத்தான். இங்கு வந்து பூஜித்து மணவோலையை வாசித்தப்பின்னரே மற்ற காரியங்களைச் செய்வதை வழக்கமாக கொண்டிருக் கின்றனர். விநாயக சதுர்த்தி விழா இக்கோயிலில் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கஸ்பாபேட்டையி லேயே முதலாவது உலக யுத்தத்தில் மகாராஷ்டிர வீரர்கள் செய்த அரிய வீரச்செயல்களின் ஞாபகார்த்தமாக ஒரு பெரிய கட்டிடம் ஒன்றைக் கட்டி அங்கு சிவாஜியின் உருவச் சிலையையும் நிறுத்தியிருக்கின்றனர். பூனா நகரத்தில் உள்ள கோயில்களில் எல்லாம் பழமை யான கோயில் பாதாளேஸ்வரர் கோயில்தான். பெயரிலி ருந்தே அது பூமியின் மட்டத்திற்கு அடியில் உள்ள கோயில் என்று அறியலாம், அந்தக் கோயில், நமது மாமல்ல புரத் தைப் போன்று மலையை வெட்டிச் செதுக்கப்பட்ட தன்று. கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வெட்டப்பட்டதென அறி கிறோம். கோயில் பூமிமட்டத்திற்கு அடியிலே இருப்பதால் படிகள் இறங்கி உள்ளே செல்ல வேண்டும். நல்ல சதுரமான, துரண்கள் அமைந்த முன்மண்டபத்துடன் கோயில் இருக் கும். அங்கு இறைவன் லிங்கத்திருவுருவில் இருப்பார். முன் மண்டபத்தையும் முந்திக்கொண்டு நந்தி ஒன்று படுத்துக் கிடக்கும். இந்த நகரத்தில் உள்ள குடை வரை இது ஒன்றுதான் என்று அறிகிறபோது, அதன் பெருமையும் விளங்கும். இந்தப் பாதாளேஸ்வரர் கோயிலை அடுத்து ஒரு சிறு கோயில். அதை ஜங்கிலி மகராஜ் கோயில் என்கின்றனர். யாரோ ஒரு மகான் காடுமேடெல்லாம் சுற்றியலைந்திருக்கிறார். கடைசியில் இங்கு வந்து தங்கி அமரர் ஆகியிருக்கிறார். அவரை சமாதி