பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#88 செய்திருந்தால் அந்தக் காரயே திருப்பி ஏர்வாடாச் சிறைக்குப் போகலாம். போகிற வழியில் பூனாவில் ஒடுகின்ற மூலா முக்தா நதிகளையும் கடக்கலாம். ஏர்வாடா சிறையை எல்லாம்தான் இன்று மூடி வைத்திருப் பார்களே என்றாலும் அந்த சிறையில் சுற்றுச் சுவருக்குள் ஒரு சிறிய இடத்தில் கஸ்தூரிபா காந்தியின் சமாதியும் மகாதேவதேசாய் சமாதியும் இருப்பதைப் பார்க்கலாம். அந்த சமாதிகளை அணுகி இந்த அமிர ஆத்மாக்களுக்கு நம் அஞ்சலியையும் செலுத்தலாம். - இப்போது நடைபெறும் யுகம் எவர்சில்வர் யுகம் என்பதை நாம் அறிவோம். ஆனால் பல வருஷங்களுக்கு முன் பூனா பித்தளைப் பாத்திரங்கள் பிரசித்தி பெற்றிருக் கின்றன, அப்போதெல்லாம். மெல்லிய தகட்டில் செய்யப் பட்ட பூனாத் தம்ளர் பிரசித்தமானது. இன்று அவை போன இடம் தெரியவில்லை என்றாலும் இன்று பூனாவில் உள்ள தமிழ் மக்கள் அந்த பூனாத் தம்ளரைவிட பிரசித்திப் பெற்றிருக்கிறார்கள். அங்குள்ள மிலிட்டரி அக்கவுண்டண்ட். ஆபீசிலும் மற்றைய எஞ்சினியரிங் பகுதியிலும், கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் வேலை செய்கின்றனர். எல்லோருமே குடும்பத்தோடு அங்கே குடியேறியவர்கள் தாம். இந்தத் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் படிப்பதற் கென ஒரு பெரிய பள்ளியை நடத்துகின்றனர். சரஸ்வதி வித்யாலயம்' என்ற அந்தப் பள்ளிக்கென நாலு லட்சம் ரூபாய் செலவில் ஒரு பெரிய கட்டிடமும் கட்டியிருக் கின்றனர். ஹைஸ்கூலில் ஆண்களும் பெண்களுமாக ஆயிரம் பேர்களும் எலிமெண்டரி ஸ்கூலில் ஐநூறு பிள்ளை களும் வசதியாகப் படிக்க வகை செய்திருக்கின்றனர். இன்னும் இந்தத் தமிழர்கள் எல்லாம் கூடி கலைக்கழகம்’ ஒன்றையும் அமைத்து இலக்கியம், இசை, நடனம், நாட்டியம், நாடகம் முதலிய கலைகளையும் வளர்த்து வருகின்றனர். இந்தப் பூனாத் தமிழர்களைப் பார்த்தால், அவர்களது தமிழ் ஆர்வத்தைப் பார்த்தால் ஒரு சபாஷ் போடத் தெரியும்.