பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 இந்த கிலையினிலே-அங்கோர் இன்பப் பொழிலிடைலே வேறொரு சுந்தளிவந்து கின்றாள்-அவள் சோதிமுகத்தின் அழகினைக் கண்டென்றன் சிங்தை திறைகொடுத்தேன்-அவள் செந்திரு எனப் பெயர் சொல்லினாள் என்று அவைமகள் தரிசனமும் கண்டிருக்கிறான்.மேலும், பின்னோர் இராவினிலே கரும் பெண்மை அழகொன்று வந்தது கண்முன் கன்னி வடிவமென்றே.களி கொண்டு சற்றே அருகிற்சென்று பார்க்கையில் அன்னை வடிவமடா.இவள் ஆதிபராசக்தி தேவியடா என்று மலை மகளையும் ஆராதித்திருக்கிறார். இப்படி யெல்லாம் பாடிய கவிஞனுக்கு சரஸ்வதியின் அருள் பரிபூரணமாக இருந்திருக்கிறது. அன்னை பரா சக்தியோ அவளது கடைக்கண் அருளை அவருக்கு அளித், திருக்கிறாள். ஆனால் இந்த மகாலக:மியோ அவரைக் கண் திறந்து நோக்கவே இல்லை. கவிஞன் பாரதி மாத்திரம் என்ன, தமிழ் மக்களையே அவள் கடைக்கண்ணால் நோக்கியிருகிறாளா என்பது சந்தேகம்தான். தன் அருள் முழுவதையும் தான் அவள் அந்த பம்பாப் ராஜ்யத்திற்கு அருளி விட்டாளே அதனால்தானே அங்கு செல்வத்தில் சிறந்த சீமான்கள் பலரும், தொழிலதிபர்கள் பலரும் குவிந்து இருக்கிறார்கள். எப்படி காளி கல்கத்தாவில் பிரபலம் பெற்று விளங்குகிறாளோ அப்படியே மகாலசுமி அந்த மராத்தியரது பம்பாயில் பிரபலம் பெற்றிருக்கிறாள். பம்பாய் ராஜ்யத்தில் கோலாப்பூரில் உள்ள மகாலசுமி கோயில் மிக்க பிரசித்தமானது. காஞ்சியில் அன்னை பார்வதி, காமாட்சி என்ற பெயரில் தனிக்கோயிலில் இருந்து அருள் புரிகிறாள். தஞ்சையில் உள்ள கூத்தனுசரில்