பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 அர்ச்சகர் உட்கார்ந்திருப்பார். அவர், பூஜையைவிட பக்தர்கள் போடும் காணிக்கையிலேயே கண் ண க. இருப்பார், இந்த சந்நிதியின் விதானத்தை அழகு செய்திருக்கிறார்கள். கலை அழகு என்றெல்லாம் இல்லா விட்டாலும் அன்னையார் மூவரையும் ஒருங்கே காணும் வாய்ப்பு பெறுகின்றோம் அல்லவா. அந்த பேற்றினையே நினைந்து தேவியரை வந்தித்து வணங்கலாம். மூவர்க்கும் முதற்பொருளாய் முததொழிலுக்கும் வித்தாகி காவிற்கும் மனதிற்கும் நாடறிய பேரறிவாய் தேவர்க்கும் முனிவர்க்கும் சித்தர்க்கும் நாகர்க்கும் யாவர்க்கும் தாயாகிய எழிற்பரையை வணங்குவாம் என்று பாடிக்கொண்டே திரும்பலாம். திரும்புமுன் இந்தக் கோயில் எப்போது எப்படி உருவாயிற்று என்று தெரிந்து கொள்ள வேண்டாமா என்ற ஆசை எழும். பம்பாயில் ெேவார்விகாஸ்வே" என்று ஒரு பாலம் கட்டியிருக் கின்றனர். இந்தப் பாலத்தைக் கட்டிய போதெல்லாம் இடிந்து போயிருக்கிறது. பல தடவை முயன்றும் இந்தப் பாலம் கட்டி முடிக்க முடியவில்லை. இந்த சமயத்தில் *பிரபு” என்னும் பட்டம் பெற்ற ஒருவரது கனவில் மகாலகடிமி தோன்றி தானும்தன் துணைவியரும் கடலுள் அமிழ்ந்து கிடப்பதாகவும், அந்தப் பிரபுவே பாலம் கட்டும் காண்டிராக்ட் எடுத்துக்கட்டுவதோடு தங்களையும் வெளிக் கொணர்ந்து கோயில் கட்டினால் பாலம் கட்டுவதற்கு தான் துணைபுரிவதாகவும் சொல்லியிருக்கிறாள். அதன்படியே அந்தப் பிரபு சிலை உருவில் இருந்த தேவியர் மூவரையும் கடலில் இருந்து எடுத்து வெளிக்கொணர்ந்து கோயில் கட்டி யிருக்கிறார். பாலத்தையுமே கட்டியிருக்கிறார். ஆதலால் மகாவrமி மிக்க வரசித்தியுடையவள். பிரார்த்தனை