பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viíi பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே, காவி ரிக்கரையிலே, பொருநைக் கரையிலே-என்ற தலைப்புக் களில் நான்கு தொகுப்புக்களாக அவை நூல் வடிவம் பெற்றுள்ளன. இந்தச் சீரிய பணியைப் பாராட்டி, காஞ்சிப் பெரியவர்கள் தொண்டைமான் அவர்களுக்கு 'கலைமணி பட்டம் நல்கி அவர்களைக் கெளரவித்தது கிடைத்தற்கரிய ஒரு பெரும் பேருகும். தொண்டைமான் அவர்களுடைய கலைத்தாகம் தமிழ் நாட்டுக் கோயில்களை பார்த்ததோடு தணிந்து விடவில்லை. வேங்கடத்துக்கு அப்பாலும் சென்று, இந்திய மண்ணில் ஆங்காங்கே எழுப்பப்பட்டுள்ள திருக்கோயில்களையும், அவற்றின் வரலாறு, கலையழகு, கலாசாரம் இவற்றையும் கண்டு இன்புறுவதற்கான வ ய் ப் பு: க் கா. க க் காத்திருந்தார்கள். காலமும் கனிந்து வந்தது. நாங்கள் அப்போது பணியின் நிமித்தம் கோவையிலிருந்ததால், அவர்களுடைய வடநாட்டுத் தலயாத்திரை கோவை யிலிருந்தே தொடங்கியது. தந்தையாரவர்களின் உற்ற நண்பர் திரு. கிரிதாரி பிரசாத் அவர்களும், மற்ருெரு நண்பர் திரு. இராதாவும். இந்த யாத்திரையில் உடன் வர ஆர்வம் காட்டவே 'மூவர் உலா வாகவே இந்தப் பயணம் அமைந்தது. யாத்திரை முடிவடைய மொத்தம் 85 நாட்கள், ஏறத்தாழ மூன்று மாதகாலம் ஆயிற்று. காரிலேயே சென்ற காரணத்தால் வழியில் நிறைய சிரமங்கள். இருந்தாலும் யாத்திரை வெற்றிகரமாக நிறைவேறியது. பின்னர் கட்டுரைகளும் கல்கியில் தொடர்ந்து வெளிவரத் தொடங்கின. ஐம்பதுக்கும் மேற் பட்ட கட்டுரைகள். கட்டுரைகளைப் படிக்கும்போது அந்த யாத்திரையில் நாமும் பங்கு கொண்டு, அந்தந் தத் தலங்களுக்குப் போய் வந்தது போன்ற ஓர்உணர்வும், மன நிறைவும் ஏற்படுவதை உணரலாம். - இந்த நூலில் காணப்படும் கட்டுரைகள் அனைத்தும் கல்கியில் தொடர்ச்சியாக வந்தவையே. இந்தக் கட்டு