பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 எங்களை ஏன் இழுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம் . அங்குதானே மும்பை தேவி கோயில் இருக்கிறது. அந்த மும்பை தேவிதானே ஆதியில் அந்தப் பிராந்தியத்தில் உள்ளவர்களின் வழிபடு தெய்வம், அந்த மும்பை தேவியின் நகரம்தானே பம்பாய் நகரம் என்று திரிந்திருக் கிறது பின்னால், ஆதலால், அந்த மும்பா தேவியைத் தரிசிக்காமல் இருக்கலாம். அதனால்தான் இத்தனை நெருக்கடிக்குள்ளும் உங்களை அழைத்துச் செல்ல விரும்பு கிறேன். கோயிலைப் பார்த்தால் கிட்டதட்ட மதுரை திருமலை நாயக்கர் மஹாலைப்போல பெரிய பெரிய தூண்கள் தாங்கி நிற்கிறது. அங்கும் மூன்று சந்நிதிகள். சிங்க வாகனத்தில் மும்பை தேவியும், அன்ன வாகனத்தில் ஜகதாம்பாளும் அன்னபூரணியும் தனித்தனி சந்நிதியில் இருக்கிறார்கள். மும்பா தேவியின் வாகனத்தைத் தினந் தோறும் மாற்றி மாற்றி அமைக்கிறார்களாம். சிவந்த முகமும் விரிந்த தலையும் உடையவளாக மும்பை தேவி காட்சித் தருகிறாள். மகாலகடிமி கோயிலுக்கு வரும் கூட்டத்தைவிட இந்த மும்பாதேவி கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகம் என்கின்றனர். தினசரி லட்சம் பேர்கள் வணங்கிச் செல்கின்றனர் என்கிறார்கள். ஆதலால் இக்கோயில் இருந்த இடத்தை ரயில்வே நிர்வாகிகள் எடுத்துக் கொண்ட பின்னரே இப்போதுள்ள இடத்திற்கு இந்தக் கோயிலைக் கொண்டு வந்திருக்கின்றனர். இக்கோயில் கட்டி அறுபத்து ஐந்து வருஷங்களே ஆகின்றன என்கின்றனர். பஞ்சவடியில் ராமன் இருந்த போது மாரீசன் மாய மானாக வந்ததும், அம்மானைத். துரத்திச் சென்று ராமன் அம்பெய்து கொன்றதும், நாம் ராமாயணத்தில் படித்திருக்கிறோம். அந்த மாரீச மானை கொல்ல ராமனுக்குச் சக்தியருளியவளே இந்த மும்பை தேவிதான் என்கின்றனர். மாமாயி என்ற பெயரோடு விளங்கியவளே பின்னர் மும்பாயி என்று. பெயரோடு விளங்கியிருக்கிறாள். பம்பாய்க்கு வந்து இந்த