பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 மும்பா தேவியை வணங்காமல் நமது க்ஷேத்திராடனம் பூரணத்துவம் பெற்றதாகாதே. இதெல்லாவற்றையும் விட நமக்கு ஒர் அதிசயம் இந்த பம்பாய் நகரில் காத்து நிற்கும். வேங்கடத்துக்கு அப்பால் நாம் துவங்கியுள்ள இந்தத் தலயாத்திரையில் அந்த வேங்கடவானன் நம்மையெல்லாம் முந்திக்கொண்டு இந்நகருக்கு முன்னமேயே வந்து ஒரு நல்ல இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறான் என்றால் நீங்கள் வியப்புத் தானே அடைவீர்கள். ஆம் பம்பாயில் பன்ஸ்வாடிப்பகுதி என்னும் இடத்தில் ஒரு பெரிய கோயில் இருக்கிறது. அதனை வேங்கடேச தேவஸ்தானம் என்கின்றனர். கோயில் வாயிலுக்கு வந்ததுமே தமிழ் நாட்டு வாடை அடிக்கிறது. நீண்டுயர்ந்த கோபுரத்துடன் கூடிய வாயில் வழியாக நுழைந்து வெளிப்பிரகாரம் வந்ததும் நாம் பம்பாயில் இருக்கிறோம் என்ற நினைப்டே இருக்காது. உள் கோயிலை சுற்றியிருக்கும் மண்டபம் எல்லாம் மொசைக் தளம் போட்டு சுத்தமாக வைத்திருக்கிறார்கள். பகவத் கீதை முழுவதையும் வெளிச்சுவரில் பொறித்து ைவத் திருக்கிறார்கள் கோயில் கருவறையில் மூலவராக வேங்கடேசன் நிற்கிறார். அவருக்கு வலப்புறம் ராஜ கோபாலனும் இடப்புறம் வரதராஜனும் கோயில் கொண் டிருக்கிறார்கள். ராமர் வேறே சீதாலட்சுமண அனுமத் சமேதனாக எழுந்தருளி இருக்கிறார். அர்ச்சகர் எல்லாம் தமிழ் பேசுகிறார்கள். கோயில் பிரகாரத்தில் வடபுறம் ராமானுஜருக்கு தனி சந்நிதி. தென்புறம் மகாலகல் மி. பத்மாசனி என்ற பெயரில் தனிக்கோயிலில் வீற்றிருக் கிறாள். அவர் பக்கத்திலேயே ஒரு கண்ணாடி அறை. அந்த அறை ஏதோ பத்து அடிச் சவுக்கத்தில் கட்டியதொன்று தான். என்றாலும் உள்ளே நுழைந்து விட்டால் அங்கே அமைத்திருக்கும் கண்ணாடிகள் பிரத்திபலிப்பதிலிருந்து ஏதோ நூற்றுக்கணக்கான அடிகள் கொண்ட விஸ்தார மான மண்டபம் போலத் தெரியும், இந்த கண்ணாடி அறை