பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. எலிபெண்டா மகேசமூர்த்தி ஒரு கவிஞன் அவன் வறியவனும்கூட. அவன் பல செல்வர்களை அணுகி இருக்கிறான். அவர்களிடம் பாடல் கள் பாடிப் பரிசு பெற்று வாழ்ந்து வந்திருக்கிறான். எல்லாச் செல்வர்களுமா இவன் பாடும் பாடல்களை கேட்டு ரசித்து சன்மானம் தந்திருப்பார்கள். ஒரு சிலர், இவன் பாடிய பாடல்களின் அருமை அறியாமல், தமிழின் இனிமையையே உணராமல், கொஞ்சம் உதாசீனமாகவே இருந்திருக்கிறார்கள். அதனால் மனம் வருந்தியிருக் கிறான். தன்வழிபடு கடவுளான சிவபெருமானிடம்ே முறையிட்டிருக்கிறான். பெருமானே! என்னை யானைக் காலால் இடரச் செய்தாலும் சரி. இல்லை நரகத்திலேயே 2738–13 - '.