பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 வீழ்த்திவிட்டாலும் சரி. ஒன்றே ஒன்றை மட்டும் செய்து விடாதே. அதாவது தமிழின் அருமை அறியாதவர்கள் முன்னிலையில் என்னை பாடல் சொல்லும் நிலையில் வைத்து விடாதே என்று விண் ணப்பித்துக் கொண்டிருக் கிறான் கவிஞன். அவன் பாடிய பாடல் இதுதான். துங்க யானைக்கால் படுத்தினும் படுத்துக சுடர் விழிப்பகுவாய்ச் சிங்க வாயிடைச் செலுத்தினும் செலுத்துக தென்புலத்தவர் கோமான் வெங்கண் மாநர கத்திடை வீழ்த்தினும் வீழ்த்துக, விடை ஏறும் எங்கள் நாயக! தமிழ் அறியார்கள் முன் இயம்புதல் தவிர்ப்பாயே! என்று கதறி இருக்கிறான் கவிஞன். அவ்வளவு மனம் கசந்திருக்கிறான். நான் எவிபெண்டா என்னும் தீவிற்குச் சென்று அங்குள்ள குடைவரைச் சிற்பங்கள் எல்லாம் சிதைந்து கிடப்பதைக் கண்டபோது இந்தப் பாடல்தான் என் ஞாபகத்திற்கு வந்தது. ஆம். சிற்பக்கலையின் அருமையை அறியாத கசடர்கள் அல்லவா இப்படி இச்சிற்பச் செல்வங்களைச் சிதைத்திருக்க வேண்டும். இச்சிற்ப வடிவங்களை உருவாக்கிய சிற்பி, இப்படி உடைந்து கிடப்பதில் ஒன்றை இன்று பார் த் து விட்டானானால், இறைவனே! இப்படி கலை உணர் வில்லாத ஒரு கூட்டத்தின் கண்ணில் என் சிற்பவடிவங் களைக் காட்டிவிட்டாயே, இதைத் தவிர்த்திருக்கக் கூடாதா?’ என்றுதான் ஏங்கியிருப்பார், கதறியிருப்பார். அத்தனை கோரமாக இங்குள்ள சிலைகள் எல்லாம் சிதைக்கப்பட்டிருக்கின்றன, போர்த்துகீசிய சிப்பாய்களால்,