பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 எவிபெண்டாவுக்கு இன்று செல்லும் நண்பர்கள் அந்த யானையைக் காண முடியாது. இத் தீவிற்கு வந்த போர்ச்சுக்கீசியர் அதனை உடைத்திருக்கின்றனர். அப்படி உடைத்த துண்டுகளையெல்லாம் எடுத்து வந்து திரும்பவும் சிமிண்ட் போட்டு கட்டி பம்பாய் வேல்ஸ் இளவரசர் காட்சி சாலையில் வைத்திருக்கிறார்கள். இந்த போர்ச்சு கீசியர் வருமுன்னே அத் தீவை, அத்தீவில் உள்ள மக்கள் கரபுரி என்றும் பூரீபுரி என்றும் அழைத்திருக்கிறார்கள். கரபுரி என்றால் கோட்டை நகரம் என்று கூறுகிறார்கள். எனக்கென்னவோ இந்த எலிபெண்டாவை அந்தப் பெயருக்கு ஏற்பவே நல்ல தமிழில் கரிபுரி என்று கூறலாம் என்றே தோன்றுகிறது. இத் தீவில் உள்ள குடைவரைகள் பஞ்சபாண்டவர் காலத்திலேயே ஏற்பட்டது என்பர் சிலர். இங்கு தான் அந்தப் பானாசுரனும் அவனது அழகிய மகள் உஷையும் வாழ்ந்திருந்தார்கள் என்றும் கூறுவர். மேலும் உஷை கன்னியாகவே வாழ்ந்தாள் என்றும் அவள் காலத்தில் இத் திவிலே பொன்மாரி பெய்தது என்றும் அதனாலேயே இத் திவை பூரீபுரி என்று அழைத்தனர் என்றும் கர்ண பரம் பரைக் கதையையும் கூறுவர். இன்னும் கிரேக்க மன்னர் அலெக்சாண்டருடன் இத்தீவினை தொடர்பு படுத்தியும் சொல்லுவர். இதற்கெல்லாம் சரித்திரச் சான்றுகளோ, ஆதாரங்களோ ஒன்றும் இல்லை என்றாலும், ஒரு காலத்தில் இத்தீவு வளம் மிகுந்த பிரதேசமாக இருந்திருக் கிறது என்று மட்டும் தெரிகிறது. இன்று விளை பொருள் ஒன்றும் இல்லாமல் வறண்ட பிரதேசமாகத்தான் இருக் கிறது. அங்கு குடியிருப்பவர் கூட அதிகமில்லைதான். அடர்ந்த கா டா க அ ந் த த் தீ வு இரு க் கி ற து. நாலரை மைல் சுற்றளவுள்ள இந்த சிறிய தீவில் அழகான குடைவரைகள் சில இருக்கின்றன. அங்கு அற்புத மான சிற்பங்கள் பலவும் இருக்கின்றன. இவற்றைக் காணவே நாம் படகு ஏறிக் கடல் கடந்து, மலைப் படிகள்