பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 எல்லாம் ஏறி இங்கு வந்து சேர்ந்திருக்கின்றோம். இத் தீவில் உள்ள குடைவரைகள் ஆறு. பூரணமாக அமைக்கப் பட்ட குடைவரைகள் நான்கு. இரண்டு குடைவரைகள் அரைகுறையாகவே நிற்கின்றன. இக்குடைவரைகளை எட்டாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் அமைத் திருக்க வேண்டும் என்று சரித்திரப் பேராசிரியர்கள் கருது கின்றனர். ஆனால் இக் குடைவரைகளில் உள்ள சிற்ப வடிவங்களை பதினேழாம் நூற்றாண்டில் இங்கு வந்து தங்கியிருந்த போர்ச்சுக்கீசிய சிப்பாய்கள் உடைத்து எறிந் திருக்கின்றனர். அவர்களுடைய குரூராதனத்திற்கும் தப்பி நிற்கும் வடிவங்களே அவற்றின் பெருமையினை இன்றும் நமக்கு நினைவுறுத்தப் போதுமானது. இங்குள்ள குடைவரைகளில் எல்லாம் முதல் குடை வரை தான் பெரியது. இது தீவின் வடமேற்கு பாகத்தில் 250 அடி உயரமுள்ள ஒரு குன்றில் இருக்கிறது. இக் குடை வரை கிட்டதட்ட 120 அடி சதுர அளவில் இருக்கிறது. குடைவரையைத் தாங்கி நிற்பது போல பெரிய பெரிய துரண்களையுமே, வெட்டிச் செதுக்கியிருக்கிறார்கள். இக் குடைவரை மூன்று பகுதியாக இருக்கும். வடக்கே பார்த்த பிரதான வாயிலை அடுத்த பெரிய மண்டபத்தோடு கூடிய பகுதி ஒன்று, அதற்கு வலப்புறமும் இடப்புறமுமாக இருக்கும் பகுதிகள் இரண்டு. மத்திய பிரதான பகுதி மண்டபத்தை இருபதிற்கு மேற்பட்ட தூண்கள் அலங்கரிக் கின்றன. துரண்கள் அடிப்பாகத்தில் சதுரமாகவும், மேல் பகுதி வட்டமாகவும் வரிவரியாகவும், அதற்கும் மேல் குடைவிரித்தாற் போன்ற போதிகைகளையும் தாங்கி நிற்கின்றன. இக் குடைவரையின் பிரதான வாயிலில் துழைந்ததும் இங்கு வலப்புறமுள்ள கற்சுவரில் பிரம்மாண்ட மான வடிவில் தாண்டவ வடிவம் ஒன்று இருக்கும். அட்டமூர்த்தியான சிவனை எட்டுத் திருக்கரங்களோடு ஆடும் பெருமானாக பத்தடி உயரத்தில் உருவாக்கி இருக் கிறார்கள். கால் இரண்டும் இன்று பூரணமாக சிதைந்து