பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 விட்டது கைகளும் சிதைந்து தான் இருக்கின்றன. தாண்டனருக்கு இடப்புறத்தில் பார்வதியும் வலப்புறத்தில் விநாயகரும் உருவாகியிருக்கிறார்கள். இன்னும் குமரன்: பிரம்மன் மற்றைய .ே த வர்கள் எ ல் ேல | ருமே உருவாகியிருக்கிருர்கள். அத்தனை வடிவங்களும் இன்று சிதைந்தே கிடக்கின்றன. இத்தாண்டவருக்கு எதிர் திசை யில் மேல் சுவரில் லகுலீச வடிவமான சிவன் இருக்கிரு:ர். பத்மாசனம் போட்டு அவர் உட்கார்ந்திருக்க வேண்டும். இன்று மார்பிற்கு மேலுள்ள பாகம் மாத்திரமே தெரி கிறது. மற்றவற்றை எல்லாம் உடைத்து எறிந்திருக் கிறார்கள். இந்தப் பிரதான குடைவரையில், நடுவில் ஒரு சிறு கோயிலையே உருவாக்கியிருக்கின்றார்கள் சிற்பிகள். அக்கோயில் கருவறையிலே லிங்கவடிவில் சிவபெருமான் இருக்கிறார். அவரை வலம் வந்து வணங்கு வதற்கெல்லாம் வகை செய்து மண்டபம் அமைத்திருக் கிறார்கள். இந்தப் பிரதான குடைவரையின் தென் கோடியிலே தலைவாயிலுக்கு நேர் எதிரே நடுநாயகமாக இருப்பவர்தான் மகேசமூர்த்தி, இவரையே திரிமூர்த்தி என்கின்றனர். மூன்று திருமுகத்தோடு மார்பு வரையே செதுக்கப்பட்ட வடிவினர் அவர். அவரது உயரம் 18 அடி. அன்று கவிச்சக்கரவர்த்தி கம்பன் தனது பாரகாவியமாகிய இராமாயணத்தை இயற்றுமுன் கடவுள் வணக்கம் ஒன்று பாடினார். எல்லா சமயவாதிகளும் ஒத்துக்கொள்ளும் வகையில் அவனது கடவுள் வணக்கம் சிறப்பாக அமைந்தது. - உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் கிலை பெறுத்தலும் நீக்கலும்-நீங்கலா அலகிலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.