பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. திரயம்பகத்து திரயம்பக நாதர் செங்கண் நெடுமாலும் சென்றிடங்தும் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போக்தருளி. நின்றவன் அண்ணாமலையான் என்று மணிவாசகர் தன் அம்மானைப் பாடல்களைத் துவங்குகிறார். எல்லாம் வல்ல இறைவனது அடியையும் முடியையும் விஷ்ணுவும் பிரம்மாவும் காணாமல் அமைந்து நின்ற தன்மையை மணி வாசகர் பல பாடல்களில் பாடிப்பாடி மகிழ்கிறார். கதை நமக்குத் தெரிந்த கதைதான். சுவையான கதை ஆதலால் எத்தனை தரம் சொன்னாலும், எ த் த ைன தரம் கேட்டாலும் அலுப்பதில்லை. ஆம். படைப்புத் தொழில் நடத்தும் பிரம்மனுக்கும், காத்தல் தொழில் நடத்தும் விஷ்ணுவிற்குமே ஒரு பலத்தப் போட்டி. தங்களில் யார் .ெ ப. ரி ய வ ன் என்று. இவர்களிடையே சிவ பெருமான் வருகிறார். அழல் உ ரு வி ல் நிற்கிறார். தன் அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என்று போட்டியை ஆரம்பித்து வைக்கிறார், சரி என்று திருமால் வராக உருவில் இறைவன் திருவடிகளைக்கான பூமியைக் குடைந்து குடைந்து கீழே செல்கிறார். பிரம்மாவோ அன்ன உருவில் வானில் பறந்து இறைவன் முடிகானப் புறப்படுகிறார். இருவரும் சென்று கொண்டே இருக்கின்றார்கள். அடியையோ முடியையோ கண்ட பாடாக இல்லை. ஆனால் இறைவன் திருமுடியில் இருந்து விழுந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் தாழம்பூ ஒன்றைச் சந்திக்கிறார் பிரம்மன். அப்பூவோ பிரம்மனால் இறைவனது முடிகாண முடியாது என்று சொல்லி வருகிறது.