பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பிரம்மன் அதனால் மயங்கவில்லை. பி ர ம் ம ன் அரன் முடியைக் கண்டுவிட்டதாகவும், முடியிலிருந்த தாழம்பூவே அதற்கு சாட்சி என்று பொய் சாட்சி சொல்லும்படியாகவும் அதனைத் தயாரிக்கிறார். இருவரும் பூமிக்கு இறங்கு கிறார்கள், இறைவனிடம் தான் தயாரித்த பொய்சாட்சி யுடன் தன் கதையைச் சொல்கிறார் பிரம்மன். இறைவனுக்கு உண்மை தெரியாமல் போகுமா? பொய் சொன்ன பிரம்மா விற்கு வழிபாடே இல்லாமல் போவது என்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ தன் பூசனைக்கே உரியது அல்ல என்றும் சாபமிட்டு விடுகிறார். அழல் உருவில் நின்ற அண்ணல் உறைந்து அண்ணாமலையாக நின்றுவிடுகிறார். இதுதான் வேங்கடத்துக்கு இப்பால் உள்ள திருவண்ணா மலையின் வரலாறு என்று புராணங்கள் எல்லாம் கூறும். இதே கதையையே வேங்கடத்துக்கு அப்பால் செல்லும் நமது தலையாத்திரையிலும் கேட்கிறோம். திரியம்பகம் என்ற தலத்திலே கதையின் முடிவிலேதான் ஒரு சிறிய மாற்றம். சாபம் பெற்ற பிரம்மன் வேண்டிக் கொண்ட படியே இறைவன் மலையாக இருக்க இசைகிருன் என்றும், அந்த மலையையே பிரம்மன் பெயரால் பிரம்மகிரி என்று அழைக்கவும் இசைகிறான் என்பது தான் மாற்றம். இந்த பிரம்மகிரி இருக்கும் தலம்தான் திரியம்பகம், அந்தத் திரியம்பகத்திற்கே செல்கின்றோம் நாம் இன்று. திரியம்பகம் செல்ல பம்பாய் ஜால்கன் ரயில் பாதையில் சென்று அஸ்வாலி என்ற ஸ்டேஷனில் இறங்க வேண்டும். ஆனால் அஸ்வாலி சிறியதொரு கிராமம் அங்கிருந்து திரியம்பகம் செல்ல வண்டியோ பஸ்ஸோ, காரோ .கிடைப்பது அரிது. அதனால் நாசிக்ரோடு ஸ்டேஷனிலேயே இறங்கி அங்கிருந்து பதினெட்டு மைல் தூரத்தில் உள்ள திரியம்பகத்திற்கு பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். கார் ஏற்பாடு செய்து கொண்டு சென்றால் வழியில் உள்ள கணேஷ் குண்ட், பாணகங்கை முதலிய இடங்களையும் பார்த்துவிட்டே செல்லலாம். கார் திரியம்பகத்தின் மேல் கோடிவரை செல்லும். அதற்கு அப்பால்தான் பிரம்மகிரி