பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 மலையிருக்கிறது. அங்குதான் கோதாவரி நதி உற்பத்தி யாகிறது. அண்ணாமலையில் கிரிப்பிரதrணம் செய்வது. போல திரியம்பகத்திலும் பிரம்மகிரிப்பிரதகடினம் செய். கிறார்கள். ஆனால் சுற்ற வேண்டியது 20 மைல் தூரம் ஆதலால் நம்மால் எல்லாம் கிரிப்பிரதகடினம் செய்ய: இயலாது. பிரதசங்ணத்தை ஒதுக்கிவிட்டு நாம் முதலில் மலையேறி கோதாவரி உற்பத்தி ஸ்தானத்திற்கே செல்ல லாம். இந்த இடத்திற்குச் செல்ல படிக்கட்டு கட்டியிருக். கின்றனர். இரண்டு மைல்தான் எழுநூறுக்கு மேற்பட்ட படிகள் ஏறிக் கடந்தே போகவேண்டும். கொஞ்சம் சிரம மாகவே இருக்கும். அப்படி படி ஏற இயலாதவர்கள் மலை அடியில் நின்றே வணக்கத்தைச் செலுத்திவிட்டு திரும்ப வேண்டியதுதான். இன்னும் ஒன்று, மலை ஏற விரும்பு. பவர்கள் அதிகாலையிலேயே அங்கு சென்று விடவேண்டும். பகல் பத்துமணிக்கு மேல் வெயிலில் படிகள் சூடாகிவிடும். ஏறுவது இயலாததாக இருக்கும். அங்கு ஒரு மண்டபம். மண்டபத்தின் முன்பு ஒரு நந்தி, மண்டபத்தில் கோதாவரி அம்மனின் சிலை இருக்கிறது. அது பளிங்குக் கல்லால் ஆனது. அந்த அம்மனின் காலடியில் இருக்கும். கோமுகத்தில் இருந்து தண்ணீர் ஒரு தொட்டியில் வடிகிறது. அந்தத் தண்ணீர் தொட்டியில் வீழ்ந்ததும் மறைந்து பின்னர் கொஞ்ச தூரத்தில் ஒரு ஒடையாக, உருவெடுக்கிறது. கோதாவரி அம்மன் மண்டபத்தில் உள்ள தொட்டியில் இறங்கி ஒரு முழுக்கு போட்டுக் கொள்ளலாம். கோதாவரியின் உற்பத்தி ஸ்தானத் திலேயே நீராடும் பாக்கியம் எளிதாக கிடைக்குமா என்ன? அந்த மலை மீதே கோதமர் ஆசிரமம் என்னும் குகை இருக்கிறது. மற்றொரு பக்கம் கோரக்நாதர் குகை ஒன்றும் இருக்கிறது. இரண்டு குகைகளிலும் சிவலிங்கம் இருக்கின்றது. இங்கெல்லாம் நாம் வணக்கம் செலுத்தி. விட்டு மலையைவிட்டு இறங்கலாம். வழியில் ராமகுண்டம், லக்ஷ்மண குண்டம் எல்லாம் இருக்கின்றன. மலை அடிவாரத்தில் கோடி தீர்த்தம் என்னும் திருக்குளம்.