பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X அன்பர்களால் பாராட்டப்படுபவர்கள் அவர்கள். ஆத் மார்த்தமான அன்புடன் அருமையான முகவுரை அளித் திருக்கிருர்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நூலை, கட்டுரைகளுக்குரிய படங்களோடு அழ காக அச்சிட்டுத் தந்துள்ள ஜீவன் அச்சகத்தாருக்கும். சிரமம் பாராது அழகாக அதனை வெளியிட முன் வந்தி ருக்கும் அபிராமி பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. பனையப்பன் அவர்களுக்கும் என் நன்றியும் பாராட்டும் உரியன. - தொண்டைமான் அவர்கள் தம் வாழ்நாளில் சாதித்த அரும்பெருங் காரியங்கள் இரண்டு. தஞ்சையில் படாத பாடுபட்டு அவர்கள் உருவாக்கிய கலைக்கூடம் ஒன்று. மற்ருென்று வேங்கடம் முதல் குமரி வரை, வேங் கடத்துக்கு அப்பால் என்ற இருபெரும் தலைப்புக்களின் கீழ் அவர்கள் ஆக்கித் தந்துள்ள கலைத்தொகுப்பு நூல்கள். தமிழ் மகளுக்குத் தந்துள்ள அரிய சீதனங் கள் இவை. தொண்டைமான் அவர்கள் இன்று நம் மிடையே இல்லை. என்ருலும் கட்டுரைகள் வாயிலாக நம்முடன் பேசுகிரு.ர்கள். யாத்திரைக்கு நமக்குத் துணே வருகிருர்கள். நம் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கோயில் கோயிலாக ஏறி இறங்குகிருர்கள். அவற்றின் கலையழகை யெல்லாம் நம் கண் முன் படம் பிடித்துக் காட்டுகிருர்கள். என்றும் நாட்படாத கட்டுரைகளாக அவை என்றென்றைக்கும் நம்முடன் உறவாடிக் கொண்டேயிருக்கும் என்பது உறுதி. ராஜேஸ்வரி நடராஜன் பாஸ்கர நிலையம் 31, 7-வது குறுக்குத் தெரு சாஸ்திரி நகர் . சென்னை-20.