பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 வங்கள் இருக்கின்றன. மும்மூர்த்தி சொருபமானவரே திரயம்பகர் என்பதை விளக்கவே இப்படி அழைந்திருக் கிறார்கள். இந்த திரபகநாதர் அடியிலே எப்போதும் நீர் ஊறிக்கொண்டேயிருக்கிறது. திரயம்பகநாதர் நமககு மரணமிலாப் பெருவாழ்வு அளிக்க வல்லவர். அவரது தோத் திரத்தில். சிறப்பானது மிருத்யுஞ்சய மந்திரம் ஆகும். ஓம்-தியம்பகம் யஜாமகே சுகந்தம் புஷ் டிவர்த்தனம் ஊர்வாறாக மிவபக்தனா மிருத்யோர் முகிஷி யமாம் மிதாது என்பது தோத்திரம். தமிழிலே தொழுவதற்கு பாசுரம் ஒன்றும் இல்லையா என்று நீங்கள் கேட்பீர்கள், அன்பர் ஒருவர் அதற்கும் பாடி வைத்திருக்கிறார். அண்டமெலாம் கண்ணாகக் கோளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம் விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோனவெளிக்குள் வெளியாய் கிறைந்து விளங்கும் ஒன்றே கண்டவடிவாய், அகண்ட மயமாய் எங்கும் கலந்தும் நின்ற பெருங்கருணைக் கடவுளே எம் கண்டவினைத் தொடக்கற சின் மயத்தைக்காட்டும் சற்குருவே ! திரியம்பகத்தே சார்ந்த தேவே. என்று பாடியும் துதிக்கலாம். இவற்றையெல்லாம் விட சிறப்பாக எவ்வளவோ தொலை துாரத்தில் இருக்கும். இந்த திரியம்பக மூர்த்தியை நமது அருணகிரியார்