பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 நினைந்து அவனைக் கந்தர் அலங்காரத்துக்குள்ளேயே அழகு செய்து வைத்திருக்கிறார் என்று அறிகிறபோது நாம் எவ்வளவோ மகிழ்ச்சி அடைவோம். மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன் வந்தால் என்முன்னே தோகைப்புரவியில் தோன்றி . நிற்பாய், சுத்த கித்தமுத்தித் தியாகப் பொருப்பை, திரிபுராந்த கனைத் திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல் யானிதன் பாலகனே என்றல்லவா தமிழ் கடவுளாம் முருகனைப் பாடிப்பரவு கிறார். - இத்திரயம்பகநாதர் கோயிலில், நமது அண்ணா மலையில் நடப்பது போலவே கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று ரதோத்சவம் நடக்கிறது. மாசி மாதத்தில் சிறப்பான பூசை நடக்கிறது. கும்பகோணத்தில் நடப்பது போலவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை மகாமகமும் அதையொட்டி ஒரு மேளாவும் நடக்கிறது என்கின்றனர். அடுத்த மகாமகம் 1968-ல்தானாம். இக் கோயிலை நாநாசாகிப் பேஷ்வா 1795-இல் கட்டி முடித் தார் என்று சரித்திர ஏடுகள் பேசுகின்றன. இக்கோயில் கட்டி முடிக்க முப்பத்தொன்று வருஷங்கள் ஆயிற்று என் கின்றனர். கட்டி முடிக்கச் செலவு பத்து லட்சம் ரூபாய் என்றும் தெரிகிறது. - இத்துறையில் திரயம்பகநாதர் கோயிலைத்தவிர இன்னும் பல கோயில்கள் உண்டு. குசாவர்த தீர்த்தத்தில் பின்புறம் கிருஷ்ணன் கோயில் ஒன்றிருக்கிறது. அதில் கிருஷ்ணவிக்கிரகம் ஒன்றைச் சலவைக் கல்லில் செய்து நிறுத்தியிருக்கிறது. கிருஷ்ணாஷ்டமி அன்று பூசை 2738–14