பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கரையிலே ஒரு அழகான கோயில் இருக்கிறது. அதுவே சுந்தர நாராயணர் கோயில். பெயருக்கு ஏற்ப அங்கு கோயில் கொண்டிருக்கும் சத்திய நாராயணப் பெருமாள் மிக்க அழகு வாய்ந்தவராக இருக்கிறார். ரீதேவி பூதேவி சகிதம் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் நமக்குக் காட்சி தருகிறார். பின்னர் கங்காதர யஷ்வந்த சந்திர சூடர் என்பவர் 1756-இல் கோயிலைக் கட்டினார் என்று தெரிகிறது. இந்த சுந்தர நாராயணன் சந்நிதியில் நாம் வணங்கிவிட்டு பாலத்தைக் கடந்து பஞ்சவடிப் பிரதேசத் தில் நுழையலாம். நாசிக் பஞ்சவடியில் மொத்தம் அறுபது கோயில்கள் வரை உண்டு. அத்தனைக்கும் உங்களை இழுத் தடிக்க விரும்பவில்லை. முக்கியமான ஒரு சில கோயில் களுக்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். பஞ்சவடி தெருக்கள் எல்லாம் நெருக்கமானவை. சுத்தமாகவும் இராது. ஆதலால் பாலம் கடந்ததும் கோதாவரிக்கரைப் பக்கமே சென்று அங்குள்ள கோயில்களைக் காணலாம். அங்கு கோதாவரி அன்னைக்கு ஒரு சிறு கோயில் கட்டி யிருக்கிறார்கள். அந்தக் கோயில் திறந்திருக்காது. வருஷம் ஒருமுறை மாசி மகத்தன்று தான் திறக்கிறார்களாம். ஆதலால் சிலை வடிவில் உள்ள கோதாவரி அன்னையை தரிசிக்க வாய்ப்பு கிடையாது. இக் கோயிலை அடுத்தே பல குண்டங்கள், அங்கெல்லாம் ஆடவரும் பெண்டிரும் நீராடிக் கொண்டிருப்பர். கோதாவரி ஸ்நானத்தினால் எவ்வளவோ புண்ணியங்கள் சேரும் என்பார்களே, அங்கு நாமும் இறங்கி நீராட வேண்டாமா பாகீரதியாம் கங்கையில் அறுபதினாயிர வருஷகாலம் ஸ்நானம் செய் வதும், பிரகஸ்பதி சிம்மராசியில் இருக்கும்போது கோதா வரியில் ஒருமுறை ஸ்நானம் செய்வதும் ஒரே பலனைத் தரும் என்பார்கள். அதற்காக நாம் அந்த நன்னாள் வரும் வரை கோதாவரிக் கரையிலே காத்திருக்க முடியுமா? அதற் கெல்லாம் காத்திராமல் விடு விடு என ஆற்றிற்குள் இறங்கி அங்குள்ள ராமகுண்டத்தில் ஒரு முழுக்குப் போட வேண் டியதுதான், கோதாவரியில் இறங்குமுன் தலைமுடியை