பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 முண்டனம் செய்து கொள்ள வேண்டும் என்பர். அப்படி எல்லாம் முண்டனம் செய்து கொள்ள எல்லோருக்கும் வசதி இராது. மனமும் வராது. இங்கு தனுஷ்குண்டம், சீதாகுண்டம், லக்ஷ்மண குண்டம், அகல்யாகுண்டம் என்று பல குண்டங்கள் இருந்தாலும் அதில் பிரதான குண்டம் ராம குண்டம்தான். அதில் இறங்கி நீராடிவிட்டால், எல்லா குண்டங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும். ராம குண்டம் எண்பத்திமூன்று அடி நீளமும் நாற்பது அடி அகலமும் உள்ள ஒரு பெரிய தொட்டி. மூன்று நான்கடியே ஆழம் உள்ளது. அடியில் கூட சிமெண்ட் தளம் போட்டு மணலைக் கொட்டியிருக்கிறார்கள். நீர் கலங்கியதாக இருந்தாலும் ஒடிக்கொண்டே இருப்பதால் சுத்தமாகவே இருக்கும். தம்பதி சமேதராக தலயாத்திரை வந்திருந்தால் இருவரும் ஒரே வஸ்திரத்தை உடுத்திக் கொண்டு குண்டத் தில் இறங்கி நீராட வேண்டும் என்பர். இதனையே ஏக வஸ்திரஸ்நானம் என்றும் சொல்லுவார். இப்படிப் புருஷன் மனைவியர் எல்லாம் நீராடுவது தனியே வந்திருப்பவர்கள் மனதில் பொருமையையே எழுப்பும். இதையெல்லாம்நல்ல நகைச் சுவையுடன் சமாளித்துக் கொள்ள வேண்டியது. தான். இராமகுண்டத்திற்கு எதிரே ஒரு மண்டபம். காந்திஜியின் அஸ்தியைக் கரைத்த இடத்தில் காந்தி ஞாபகார்த்தமாகக் கட்டியிருக்கிறார்கள். கோதாவரிக்கு முன்னமேயே இருந்த புனிதத்தன்மை இன்னும் எவ் வளவோ புனிதம் அடைந்து இருக்கிறது, இந்த ஞாப கார்த்தத்தினால். இந்த ராம குண்டத்திற்கு அருகே இரண்டு கோயில்கள், கோதாவரியின் இடது கரையில் இருப்பது கபாலேசுவரர் கோயில். பஞ்சவடியில் உள்ள கோயில்களில் எல்லாம் புராதனமான கோயில் இது தான். பிரம்மாவின் தலைகள் ஐந்து என்றும் அதில் ஒன்றையே சிவன் கிள்ளி எறிந்தார் என்றும் அந்தக் கபாலமே அவரது கையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றும், அந்தக் கபாலத்தை ஏந்தியே அவர் பிக்கrாடனனாக வருகிறார் என்பதும் புராணக் கதை, சென்னையில் உள்ள